இன்குலாப் ஜிந்தாபாத் முழங்கிய ஸ்வாதி மாலிவால்! செல்லாது செல்லாது! மீண்டும் பதவியேற்க சொன்ன சபாநாயகர்
டெல்லி: மாநிலங்களவை எம்பியான ஸ்வாதி மாலிவால், பதவி பிரமாணத்தை வாசிக்கும்போது 'இன்குலாப் ஜிந்தாபாத்' முழக்கமிட்டதால், மீண்டும் பதவி பிரமாணத்தை வாசிக்க வேண்டும் என சபாநாயகர் கூறியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆம் ஆத்மியை சேர்ந்த ஸ்வாதி மாலிவால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இடைக்கால பட்டஜெட் தாக்கலுக்கு முன்னதாக நேற்று அவர் பதவி பிரமாணம் செய்துக்கொண்டார். ஆனால் இந்த சம்பவத்தின் போது மாநிலங்களவையில் சலசலப்பு எழுந்தது. காரணம் அவர் பதவி பிரமாணம் செய்துக்கொண்டபோது 'இன்குலாப் ஜிந்தாபாத்' அதாவது 'புரட்சி ஓங்குக' என்று எழுப்பிய முழக்கம்தான். இதனால் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மாலிவால் மீண்டும் பதவி பிரமாணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு அவரை இருக்கைக்கு அனுப்பிவிட்டார்.

மட்டுமல்லாது ஸ்வாதி மாலிவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினருக்கான சத்தியப்பிரமாணத்தை வாசிப்பதற்கு பதில், "ராஜ்யசபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட ஸ்வாதி மாலிவாலாகிய நான்" என நியமன எம்பிக்களின் சத்தியப்பிரமாணத்தை வாசித்திருந்தார். எனவே மாலிவால் இரண்டாவது முறையாக பதவியேற்க இதுவும் முக்கிய காரணமாகும்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மாலிவாலை அழைத்த தன்கர், "இரண்டாவது முறையாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளும் போது, என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை மட்டுமே படிக்க வேண்டும். இதில் எந்த கூடுதல் வாசகங்களும் அனுமதிக்கப்படாது. இது ஒரு புனிதமான தருணம்" என்று கூறி பதவியேற்க சொன்னார்.
இதனையடுத்து இரண்டாவது முறை மாலிவால் பதவி பிரமாணத்தை வாசித்தார். இந்த முறை அவர் எந்த முழக்கத்தையும் எழுப்பவில்லை. எனவே முதலில் செய்துக்கொள்ளப்பட்ட சத்தியப்பிரமாணம் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications