Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு! தொழிலதிபர் அதானியும் சந்தித்தார்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே 2 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வருகை தந்தார். டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேசினார். முன்னதாக தொழிலதிபர் அதானியும் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார்.

இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த உடன், இந்தியாவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி அல்லது பிரதமர் முதல் பயணம் மேற்கொள்வது இதுவரை இருந்து வரும் நடைமுறை.

 Sri Lankan President Ranil Wickremesinghe meets PM Modi

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகி அந்நாட்டை விட்டு தப்பி ஓடினர். பின்னர் இலங்கை திரும்பி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளனர். இந்த புரட்சியில் இலங்கை ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்கே.

இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு ஆண்டாகியும் இந்தியாவுக்கு ரணில் விக்கிரமசிங்கே வருகை தரவில்லை. இந்திய தரப்பில் மத்திய அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் இலங்கை சென்று வந்தனர். அதே நேரத்தில் இந்தியாவும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கியது. இன்னொரு பக்கம் சீனாவும் இலங்கைக்கு போட்டி போட்டுக் கடன் வழங்கியது.

 Sri Lankan President Ranil Wickremesinghe meets PM Modi

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே நேற்று இந்தியா வருகை தந்தார். டெல்லியில் ரணில் விக்கிரமசிங்கேவை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வரவேற்றார். பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை தொழிலதிபர் அதானியை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கை பொருளாதார நெருக்கடி, இருதரப்பு உறவு உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ரணில் பேச்சு: பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது: இலங்கையில் வரலாற்றில் அண்மையில் ஏற்பட்ட மிகவும் கடினமான காலங்களில் இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி இருந்தது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட இந்தியாவின் ஆச்சரியமளிக்கும் வகையிலான பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்பில் பாராட்டுகளைத தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும்பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பாராட்டுக்குரியவை; ஆச்சரியமளிக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+