ஈழத் தமிழருக்கு 'மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா குடியுரிமை மசோதா...? வைரமுத்து
டெல்லி: ஈழத் தமிழ் அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவி சங்கர், கவிஞர் வைரமுத்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளார்.

லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் போது திமுக எம்.பி. டி.ஆர் .பாலு, ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அதேபோல் மற்றொரு திமுக எம்பி தயாநிதி மாறனும் கேள்வி எழுப்பினார்.
சிவசேனாவும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை விடுத்தது. தற்போது வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், இந்தியாவில் 1 லட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். 35 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வாரும் ஈழத் தமிழர்களுக்கும் இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
I request the Government of India to consider giving citizenship to more than 1 lakh Tamil Sri Lankans who are living in this country as refugees for the last 35 years.#CABBill
— Sri Sri Ravi Shankar (@SriSri) December 10, 2019
இதேபோல் கவிஞர் வைரமுத்துவும் தமது ட்விட்டர் பக்கத்தில், இலங்கைத் தமிழ் அகதிகளை அண்டைநாட்டுக் குடிமக்களாகக் கருதாமல் 'மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா இந்தியக் குடியுரிமை மசோதா...? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அகதிகளை அண்டைநாட்டுக் குடிமக்களாகக் கருதாமல் 'மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா இந்தியக் குடியுரிமை மசோதா...?
— வைரமுத்து (@vairamuthu) December 10, 2019
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னெடுங்காலமாக இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இதில் விடுபட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டால் மட்டுமே இந்தியா மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் போற்றுகிற தேசம் என்பது உறுதியாகும். எனவே, மத்திய அரசு இப்பிரச்சினையைத் தாயுள்ளத்தோடு அணுகிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
பன்னெடுங்காலமாக இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இதில் விடுபட்டு இருக்கிறார்கள். pic.twitter.com/omOGRoEhgg
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 10, 2019
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications