ஸ்டேன் சாமி.. பொய் கேஸ் போட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை.. குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கடிதம்
டெல்லி: ஸ்டேன் சாமிக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளன. முதல்வர் ஸ்டாலின், காங். இடைக்கால தலைவர் சோனியா உள்ளிட்டோர் இந்த கடிதத்தை எழுதி உள்ளனர்.
2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் கடந்த ஆண்டு ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்டார். என்ஐஏ இவருக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்தது. இந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்டான் சாமி நேற்று மானம் அடைந்தார்.

பெயில் கிடைக்காமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மரணம் அடைந்தார். ஸ்டேன் சாமி மரணம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஸ்டேன் சாமி மரணம் குறித்து குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளன.
முதல்வர் ஸ்டாலின், காங். இடைக்கால தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கன்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மதசார்பாற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி தேவகவுடா, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், சிபிஐ ராஜா, சிபிஎம் எம்பி சீதாராம் யெச்சூரி ஆகியோர் இந்த கடிதத்தை எழுதி உள்ளனர்.
இந்த கடிதத்தில், ஸ்டேன் சாமிக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை தேவை. ஸ்டேன் சாமியின் தொடர் சிறை தண்டனைக்கும், அவர் மனித தன்மையற்று நடத்தப்பட்டதற்கு காரணமானவர்களை உங்களின் அரசு உடனடியாக தண்டிக்க வேண்டும்.
இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதோடு பீமா - கொரேகான் வழக்கில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக உபா உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட எல்லோரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
மிக்க வேதனையுடன் இந்த கடிதத்தை நாங்கள் எழுதுகிறோம். கஸ்டடியில் நிகழ்ந்த ஸ்டேன் சாமியின் மரணம் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications