ஸ்டார்பக்ஸ் சிஇஓ லட்சுமணன் டிஸ்மிஸ் ஏன்? 6 மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட வேலை பார்க்க மாட்டாராம்!
டெல்லி: கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்ய மாட்டேன் என்று சின்னத் தம்பி திரைப்படத்தில் கவுண்டமணி சொல்லும் டயலாக் ரொம்பவே ஃபேமஸ். ஆனால் உண்மையிலேயே அப்படி ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் அது முற்றிலும் உண்மை. அது யார் என்றால் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த லட்சுமண் நரசிம்மன் தான். இவரது இந்த செயலால் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிரடியாக டிஸ்மிஸ் நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஸ்டார்பக்ஸ்.. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி காஃபி கம்பெனியாகும். இதற்கு நாடு முழுவதும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான கிளைகள் உள்ளன. இந்த ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) லட்சுமண் நரசிம்மன் செயல்பட்டு வருகிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இவர் பெப்சிக்கோ உள்பட பல்வேறு முன்னணி பிராண்ட் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் கடந்த 2023 மார்ச் மாதம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். ஸ்டார்பக்ஸின் நீண்ட கால தலைமை செயல் அதிகாரியாக இருந்த இடைக்கால தலைவர் ஹோவர்ட் ஷுல்ட்ஸ்க்கு பிறகு அந்த பொறுப்பில் லட்சுமண் நரசிம்மன் செயல்பட தொடங்கினார்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் லட்சுமண் நரசிம்மன் ஃபார்ச்சூன் பத்திரிகைக்கு இண்டர்வியூ ஒன்று கொடுத்தார். அப்போது அவர் கூறிய கருத்து தான் சர்ச்சையை கிளப்பியது. அதாவது பெரும்பாலும் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வது இல்லை என்று லட்சுமண் நரசிம்மன் தெரிவித்தது தான் இதற்கு காரணமாகும். இதுதொடர்பாக லட்சுமண் நரசிம்மன் கூறியதாவது:
‛‛நான் பேலன்ஸான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். நான் பெரும்பாலும் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வது இல்லை. மாலை 6 மணிக்கு பிறகு யாராவது என்னுடைய ஒரு நிமிடத்தை எடுத்து கொள்வதாக இருந்தால் அது மிகவும் முக்கியமான ஒன்றாக தான் இருக்கும். இதனால் அது முக்கியமா? இல்லையா? என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். முக்கியம் இல்லை எனும் பட்சத்தில் ஒருநாள் வரை காத்திருக்கும். ஏனென்றால் நான் ஊரில் இருக்கும்போது மாலை 6 மணிக்கு பிறகு பணி செய்தால் என் குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்படும்'' என்றார்.
ஸ்டார்பக்ஸ் எனும் பெரிய நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்து கொண்டு கோடிகளை சம்பளமாக பெறும் லட்சுமண் நரசிம்மன் இப்படி தெரிவித்து இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது பலருக்கும் கேள்விகளையும் எழுப்பியது. இத்தகைய சூழலில் தான் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் இருந்து லட்சுமண் நரசிம்மன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஸ்டார்பக்ஸ் போர்ட் உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். லட்சுமண் நரசிம்மனுக்கு பதிலாக அந்த பொறுப்பில் பிரையன் நிகோல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பிரையன் நிகோல் Chipotel ரெஸ்டாரண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். தற்போது அங்கிருந்து அவர் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛ஸ்டார்பக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் போர்ட் உறுப்பினர் பதவியில் இருந்து லட்சுமண் நரசிம்மன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பிரையன் நிகோல் அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் லட்சுமண் ராமகிருஷ்ணன் ஏன்? ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்ய மாட்டேன் என்று லட்சுமண் ராமகிருஷ்ணன் கூறியது தான் அவரை பதவியில் இருந்து தூக்க முக்கிய காரணம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications