தற்சார்பு திட்டம்.. சிறு-குறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.10000 கோடி நிதி.. நிர்மலா அதிரடி!
டெல்லி: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிறு மற்றும் குறு ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு உதவியாக ரூபாய் 10 ஆயிரம் கோடி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் முன் முக்கியமான திட்டங்களை அறிவித்தார். அதன்படி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக அவர் கூறினார். இதை தொடர்ந்து இரண்டு நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதன்படி மூன்றாவது நாளாக தன்னிறைவு இந்தியா திட்டத்தின் 3ம் கட்ட சிறப்பு திட்டங்களை இன்று நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். இன்று விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் குறித்து கவனம் செலுத்துவோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
அதில், இந்தியாதான் உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்கிறது. ஊரடங்கு காரணமாக பால் 20-25% குறைந்துள்ளது. பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6,400 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீன் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம் போடப்பட்டுள்ளது.
மீண்டும் பிரதமரின் கிசன் சம்பட யோஜன திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் துவங்கப்பட உள்ளன. இதன் காரணமாக ஏராளமானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பொருளாதார சரிவு மீட்க இது உதவியாக இருக்கும்.
கூட்டுறவு சங்கம் மூலம் ஊரடங்கின் போது 560 லட்சம் லிட்டர் பால்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5.60 லட்சம் லிட்டர் பால் சராசரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. மீன்வள மேம்பாட்டிற்காக ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மீன்பிடி துறைமுகம், மீன்சந்தைகளுக்கு உள்கட்டமைப்புகளுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு உதவியாக ரூபாய் 10 ஆயிரம் கோடி அளிக்கப்படும். இந்த 10 ஆயிரம் கோடி சிறு, குறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும். உள்ளூரில் தயாரிப்போம் திட்டத்திற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.குளிர் சாதன கிடங்குகளில் உணவு பொருட்களை பாதுகாப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications