டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட ராமானுஜர் சிலை சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது! பின்னணி தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியால் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ராமானுஜர் சிலை சீனாவில் ரூ 135 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது.

Recommended Video

    China-வுக்கும் Modi திறந்த Ramanujar Silai-க்கும் என்ன தொடர்பு? | Oneindia Tamil

    வைணவ ஆச்சாரியரான ராமானுஜரின் ஐம்பொன்னால் ஆன 216 அடி உயர சிலையை இன்றைய தினம் ஹைதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த சிலை ரூ 1000 கோடியில் உருவாக்கப்பட்டது.

    ஹைதராபாத் விமான நிலையம் அருகே 45 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை சுற்றி 108 திவ்ய திருத்தலங்களின் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் மை குரூப் நிறுவனத்தின் ஜுப்பாலி ராமேஸ்வர ராவ் என்பதால் தானமாக வழங்கப்பட்டது.

    நெற்றியில் “நாமம்” காவி உடையில் ராமனுஜர் சிலையை திறந்து வைத்த பிரதமர்.. தமிழ் மொழி குறித்து புகழாரம் நெற்றியில் “நாமம்” காவி உடையில் ராமனுஜர் சிலையை திறந்து வைத்த பிரதமர்.. தமிழ் மொழி குறித்து புகழாரம்

    ரூ 135 கோடி

    ரூ 135 கோடி

    ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜரின் 1000ஆவது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி இந்த சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலை சீனாவில் ரூ 135 கோடியில் வடிவமைக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த சிலையை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தின் போது இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனமும் ரேஸில் இருந்தது.

    15 மாதங்கள்

    15 மாதங்கள்

    ஆயினும் இந்த ஒப்பந்தம் சீன நிறுவனமான ஏரோசன் கார்பரேஷனுக்கு கொடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 135 கோடியாகும். இந்த சிலையை வார்க்கும் பணிகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு வார்க்கப்பட்டு 1600 துண்டுகளாக சிலை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இதை நிறுவும் பணிகள் 2017- 2018 ஆம் ஆண்டு சுமார் 15 மாதங்கள் நடைபெற்றன.

    ஐம்பொன்னால் ஆனது

    ஐம்பொன்னால் ஆனது

    வெள்ளி, செம்பு, தங்கம், துத்தநாகம், டைட்டானியம் ஆகிய ஐம்பொன்களால் ஆன இந்த சிலையில் 80 சதவீதம் செம்பு உள்ளது. 216 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளதால் இது இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிலையாக விளங்குகிறது. எனினும் இந்த சிலையை வார்க்கும் பணிகளுக்கு இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்காமல் சீனாவுக்கு கொடுத்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3 மாடல்கள்

    3 மாடல்கள்

    ஸ்ரீ ராமானுஜ சஹஸ்ராப்தி ஒருங்கிணைப்பாளர்களின் சார்பாக மை குரூப் நிறுவனத்தின் தலைவர் ஜுப்பாலி ராமேஸ்வர ராவ் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஸ்ரீராமானுஜர் சிலையை வடிவமைக்க ஆகமவிதிகளின் படி ஆரம்பத்தில் 14 மாடல்கள் பெறப்பட்டு அவற்றில் 3 மாடல்கள் இறுதி செய்யப்பட்டு அவை 3டி ஸ்கேனிங் செய்து பின்னர் சீனாவுக்கு அனுப்பப்பட்டது.

    English summary
    Statue of Equality inaugurated in Hyderabad was made in China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X