அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஆகம கோயில்களில் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளாமல் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில் ரிட் மனு ஒன்று தக்கல் எய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் உள்ள ஆகம கோவில்களில் அர்ச்சகர் நியமனத்தின் போது ஆகம விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை தமிழக அரசு தொடர்ந்து மீறி வருகிறது. இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆகம கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம், பயிற்சி உள்ளிட்டவற்றில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபன்னா, எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜரானார். அவர் தனது வாதத்தில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறி, ஆகம கோவில்களில் அர்ச்சகர் நியமனம் மற்றும் இடமாற்றங்களை செய்து வருகிறது. இது முற்றிலும் சட்ட விரோதமானது என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், தற்போதைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆகம கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் எதுவும் மேற்கொள்ளாமல் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் இந்த மனுக்கள் தொடர்பாக இந்து அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அர்ச்சகர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications