டெல்லி ஜேஎன்யூ தேர்தல்: பாஜகவை வீழ்த்திய இடதுசாரிகள்! 27 ஆண்டுகளுக்கு பின் தலித் 'மாணவர்' தலைவர்!
டெல்லி: டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்து இடங்களையும் இடதுசாரி கட்சிகளின் மாணவர் கூட்டமைப்பு கைப்பற்றியது. பாஜகவின் மாணவர் அமைப்புகள் படுதோல்வியைத் தழுவின.
நாட்டின் பிரபலமான கல்வி நிறுவனங்களில் டெல்லி ஜேஎன்யூ எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் ஒன்று. டெல்லி ஜேஎன்யூ, அரசியலிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வரக் கூடிய கல்வி நிறுவனம்.

டெல்லி ஜேஎன்யூவில் வலதுசாரிகளான பாஜகவும் பாஜக எதிர்ப்பாளர்கள் அனைவரும் இடதுசாரிகளாக ஒரு அணியாகவும் நிற்பர். டெல்லி ஜேஎன்யூவில் நடைபெறும் மாணவர் சங்க தேர்தல் முதல் அத்தனை போராட்டங்களிலும் இருதரப்பும் தங்களது பலத்தை வெளிப்படுத்துவதில் எப்போதும் முனைப்பாகவும் இருக்கும்.

டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தலில் சுமார் 7,000-க்கும் அதிகமானோர் வாக்களித்தனர். தலைவர் பதவிக்கு மொத்தம் 8 பேர் போட்டியிட்டனர். இடதுசாரி மாணவர் கூட்டமைப்பின் தனஞ்ஜெய், மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் உமேஷ் சந்திரா அஜ்மீராவை 922 வாக்குகள் வித்தியாசத்தின் தனஞ்ஜெய் தோற்கடித்தார். துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இடதுசாரியான அவ்ஜித் கோஷ், பாஜகவின் ஏபிவிபியின் தீபிகா சர்மாவை 927 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார். இதேபோல பொதுச் செயலாளர் பதவி, இணைச் செயலாளர் பதவிகளுக்கான தேர்தலிலும் பாஜகவின் ஏபிவிபி வேட்பாளர்களை இடதுசாரி மாணவர்கள் கூட்டமைப்பினர் வீழ்த்தினர். இத்தேர்தல் மூலமாக மொத்தம் 42 கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Jai Bhim and Lal Salam in JNU ! pic.twitter.com/c3vvdoFsFw
— Arvind Gunasekar (@arvindgunasekar) March 24, 2024
தற்போது டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றுள்ள தனஞ்ஜெய், பீகார் மாநிலம் கயாவை சேர்ந்தவர். முனைவர் ஆய்வுப் பட்ட மாணவர். 1996-97-ம் ஆண்டுக்குப் பின்னர் டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவராகும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தனஞ்ஜெய்.
டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட்டதை கொண்டாடும் வகையில் ஜெய் பீம், லால் சலாம் முழக்கங்கள் அந்த வளாகத்தை அதிரவைத்தன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications