நீட்: ராஜஸ்தான், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா, தமிழகத்தில் உக்கிர போராட்டம்- பாஜக அலுவலக முற்றுகை!
டெல்லி: மத்திய அரசின் தேசியத் தேர்வு முகமை நடத்தும் நீட்,நெட் உள்ளிட்ட பொதுத்தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், பெற்றோர் போராட்டம் வெடித்திருக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் வட இந்திய மாநிலங்களிலும் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகள் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றன. வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண்கள் என விதம் விதமான முறைகேடுகளால் நெட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் உள்ளன. நீட் நுழைவுத் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு நேற்று மறுதேர்வு நடத்தப்பட்டது. ஆனால் 48% மாணவர்கள் இந்த மறு தேர்வில் பங்கேற்கவில்லை. சத்தீஸ்கரில் ஒரு மாணவர் கூட நீட் மறுதேர்வு எழுத வரவில்லை.

நீட், நெட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நெட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் பீகாரில் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நீட் , நெட் பொதுத்தேர்வுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாணவர்களுடன் பெற்றோர்களும் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
Rajasthan NSUI Students Marshal Protest on NEET Paper Leak issue !#BanNTA pic.twitter.com/QbXMAnadK2
— Goudrusarkar - ಗೌಡ್ರುಸರ್ಕಾರ್ (@Gs_0107) June 23, 2024
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பல்வேறு மாணவர் அமைப்பினர் இத்தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் சார்பாக தொடர்ச்சியாக பல நகரங்களில் மாணவர்கள் கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல வட இந்திய மாநிலங்களிலும் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாக நடைபெறுகின்றன .ராஜஸ்தானில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக தீப்பந்த பேரணி நடைபெற்றது.












Click it and Unblock the Notifications