காற்று மூலம் கொரோனா மிக வேகமாக பரவுகிறது.. ஆதாரத்துடன் ஷாக் கொடுக்கும் ஆய்வுகள்.. இதை படிங்க!
டெல்லி: கொரோனா வைரஸ் காற்றின் மூலம்தான் வேகமாக பரவுகிறது என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒருவர் சுவாசிக்கும்போது, பேசும்போது, கத்தும்போது, பாடும்போது அல்லது தும்மும்போது வைரஸை காற்றின் மூலம் உள்ளிழுக்கும்போது பாதிப்படைகிறார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலையின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.

கொரோனா தாக்கம்
கொரோனா தொற்றினால் நாடு தத்தளிக்கிறது என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக தினமும்,ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்து வருகின்றனர். இந்த தொற்றுநோயைத் தடுக்க மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

காற்று மூலம் பரவுகிறது
ஆனால் நோயை கட்டுப்படுத்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மருத்துவ இதழான லான்செட் ;கொரோனா வைரஸ் காற்று வழியாக வேகமாக பரவுகிறது. அதனால்தான் இந்த வைரஸுக்கு முன்னால் அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் சுகாதார வசதிகள் தோல்வியடைந்து வருகின்றன என்று கூறியுள்ளது.

வல்லுநர்கள் ஆய்வு
சுமார் 3 நாடுகளைச் சேர்ந்த 6 வல்லுநர்கள் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டு இதனை உறுதி செய்துள்ளனர். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 6 வல்லுநர்கள் ஒரு முழுமையான ஆய்வு செய்தனர், காற்றின் மூலம் கொரோனா வைரஸ் ஒரு நபரை வேகமாக பாதிப்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் காற்றில் பரவுவது குறித்து வலுவான ஆதாரங்கள் கிடைத்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

எப்படி பரவுகிறது?
ஒருவர் சுவாசிக்கும்போது, பேசும்போது, கத்தும்போது, பாடும்போது அல்லது தும்மும்போது வைரஸை காற்றின் மூலம் உள்ளிழுக்கும்போது பாதிப்படைகிறார் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆகவே காற்றோட்டம் தொடர்பான நடவடிக்கையில் மிகுந்த கட்டுப்பாடு தேவை என்று அவர்கள் கூறியுள்ளனர். கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் கூட்டத்தை குறைத்தல் மற்றும் மக்கள் வீட்டிற்குள் செலவழிக்கும் நேரம், வீட்டின் உட்புறங்களில் இருக்கும்போதெல்லாம் மாஸ்க் அணிவது (6 அடி அல்லது 2 மீட்டருக்குள் இல்லாவிட்டாலும் கூட) போன்ற வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த ஆய்வைச் சரிபார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications