தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத பிரதமர் மோடி- கொளுத்திப் போட்ட சு.சுவாமி
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்காதது தொடர்பாக விளக்கம் தர வேன்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது விவாதத்துக்குரியதாகி உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக இருந்தவர் யுயு லலித். அவர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவர் மாளிகை, தர்பார் மண்டபத்தில் இன்று (09.11.2022) காலை 10 மணி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டாக்டர் நீதிபதி தனன்ஜெய யஷ்வந்த் சந்திரசூட் பதவி ஏற்றுக் கொண்டார். குடியரசுத்தலைவர் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ட்விட்டரில் மோடி வாழ்த்து
புதிய தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூடுக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் பதவிக்காலம் அவருக்கு இனிதாக அமைய வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை
நாட்டின் தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டிருந்தனர். பிரதமர் மோடி தமது பதவி காலத்தில் எந்த ஒரு தலைலை நீதிபதியின் பதவி பிரமாண நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தது இல்லை.. முதல் முறையாக சந்திரசூட், பதவியேற்பில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது போன்ற கருத்துகள் இடம் பெற்றிருந்தன.

நெட்டிசன்கள் விமர்சனம்
அதேநேரத்தில், பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்காதது தொடர்பான சில யூகமான கருத்துகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. அதாவது பிரதமர் மோடியும் தலைமை நீதிபதி சந்திரசூட்டும் பெரும்பான்மையான விஷயங்களில் ஒரே கருத்து கொண்டவர்களாக இருக்கலாம்; அல்லது
முழுமையாக முரண்பட்டவர்களாக இருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

சு.சுவாமியின் சர்ச்சை ட்வீட்
இந்த களேபரங்களில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தலையிட்டு ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார். தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இது தொடர்பாக அவர் விளக்கம் தர வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. இமாச்சல பிரதேசத்தில் இன்று பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications