Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான்தான் பிரதமரின் மாமியார்.. சுதா மூர்த்தியை நம்ப மறுத்த இமிகிரேஷன் அதிகாரிகளால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நான்தான் இங்கிலாந்து பிரதமரின் மாமியார் என கூறியவுடன் விமான நிலைய அதிகாரிகள் என்ன ஜோக் அடிக்கிறீர்களா என கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்போசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் அவருடைய மனைவி சுதா மூர்த்தி (72). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் அக்ஷதா மூர்த்தி, பிரிட்டன் பிரதமரும் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக்கின் மனைவியாவார்.

Sudha Moorthy says in Airport that she is mother in law of UK PM

இந்த நிலையில் சுதா மூர்த்தி பிரபலமான தி கபில் சர்மா ஷோவில் கலந்து கொண்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில் ஒரு முறை நான் லண்டன் சென்றிருந்தேன். அப்போது லண்டனில் இமிகிரேஷன் அதிகாரி எனது குடியிருப்பு முகவரியைக் கேட்டு அதற்கான படிவத்தில் எழுத வேண்டும் என கேட்டிருந்தார்.

அப்போது என்னுடன் எனது மூத்த சகோதரியும் இருந்தார். நான் லண்டனில் இருக்கும் எனது மகன் வீட்டு முகவரியை எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் எனக்கு அவருடைய முகவரி நினைவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் மகளுடைய முகவரியை எழுத முடிவு செய்தேன். நான் எனது மகளின் முகவரியை எழுதியவுடன் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Sudha Moorthy says in Airport that she is mother in law of UK PM

நான் எழுதிய முகவரி 10 டவுனிங் ஸ்ட்ரீட் என எழுதியிருந்தேன். இது பிரிட்டன் பிரதமரின் முகவரியாகும். இதை பார்த்ததும் என்ன ஜோக் செய்கிறீர்களா என விமான நிலைய அதிகாரிகள் கேட்டனர். அதற்கு நான் சொன்னேன், நான் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் என்றும் என்னுடைய மகள் அக்ஷதா சுனக் அவருடைய மனைவி என்றும் கூறினேன். இவ்வாறு ரிஷி சுனக்கின் மாமியார் தெரிவித்துள்ளார்.

72 வயதுடைய சுதா மிகவும் எளிமையான தோற்றத்தில் இருப்பார். இதனால் விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர் பிரதமரின் மாமியார் என்பதை ஏற்க முடியாமல் போயிருக்கலாம். சுதா மூர்த்திக்கு அண்மையில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மபூஷன் வழங்கப்பட்டது. அவருடைய சேவைகளை பாராட்டி வழங்கப்பட்டது. அண்மையில் நடந்த விழாவில் சுதா மூர்த்தி பேசுகையில் நான் எனது கணவரை தொழிலதிபர் ஆக்கினேன்.

Sudha Moorthy says in Airport that she is mother in law of UK PM

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பிறகு ஒரு பெண் இருக்கிறாள் என்பதற்கு உதாரணம் இது. அது போல் என்னுடைய மகள் அவரது கணவரை பிரிட்டன் நாட்டின் பிரதமராக்கினார். பாருங்கள் பெண் நினைத்தால் அவருடைய கணவரை எப்படி வேண்டுமானாலும் முன்னேற வைக்க முடியும் என கூறியிருந்தார். மேலும் தனது மருமகன் வியாழக்கிழமைகளில் ராகவேந்திரருக்கு விரதம் இருப்பார் என்றும் எந்த நல்லதையும் அவர் வியாழக்கிழமைகளில் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+