Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு முழுக்க ஒலிக்கும் தமிழ்க்குரல்: நாடாளுமன்ற திறப்பு விழா தொகுப்பாளராக சுதா சேஷைய்யன்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : நாடே ஆர்வத்தோடு பார்த்து வரும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ்க் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மற்றும் இந்தியில் நாடாளுமன்ற திறப்பு விழாவை தொகுத்து வழங்கி வருகிறார் சுதா சேஷய்யன். சுதா சேஷய்யன் இதற்கு முன்பும் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்தியாவின் பெருமைமிகுந்த நாடாளுமன்றக் கட்டிடம் அமைக்கப்பட்டு நூறாண்டுகளை நெருங்கும் நிலையில், அதிநவீன வசதிகளுடன், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

Sudha Seshayyan hosting a national wide live telecast of new parliament inauguration ceremony

புதிய நாடாளுமன்றம் : நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா காலை 7.30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார். இதன் பின்னர் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதினங்கள் பங்கேற்றனர்.

தமிழில் தேவாரம் பாடி பூஜையுடன் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தொடங்கியது. ஆதினங்கள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர். ஆதினங்களிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்னர் அவர்களிடம் இருந்து செங்கோலை பிரதமர் மோடி பெற்றார்.

செங்கோல் : பின்னர், மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க, பெருமை மிகு செங்கோலை பயபக்தியுடன் நாடாளுமன்ற கட்டடத்திற்கு கொண்டு சென்றார் பிரதமர் மோடி. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சர்வ மத பிராத்தனை நடைபெற்றது. நாடாளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட பணியாளர்களை பிரதமர் மோடி கௌரவித்தார்.

நாடே கவனித்து வரும் நாடாளுமன்ற திறப்பு விழாவினை தமிழ் மற்றும் இந்தியில் தொகுத்து வழங்கி வருகிறார் டாக்டர் சுதா சேஷய்யன். நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழ்க் குரல் ஒலிப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுதா சேஷய்யன் : சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் சுதா சேஷய்யன், தமிழ், இலக்கியம், ஆன்மீகம், மேடைப்பேச்சு, பட்டிமன்றம் என பல துறைகளில் ஆர்வம் கொண்டவர். அவர்தான் இன்று நாடே வியந்து பார்க்கும் நாடாளுமன்ற திறப்பு விழாவின் தொகுப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10-வது துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் கடந்த 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த 2022 டிசம்பர் வரை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகச் செயல்பட்டார் சுதா சேஷய்யன்.

சுதா சேஷய்யன் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியர் அனுபவம், பரவலான நிர்வாக அனுபவமும் கொண்டவர். சென்னை மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார் சுதா சேஷய்யன். தனது சிற்ப்பான பணிகளுக்காக ஏராளமான விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

மருத்துவத்துறையில் உடற்கூறியல் பைபிளாகக் கருதப்படும் கிரேஸ் அனாடமியின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார் டாக்டர் சுதா சேஷய்யன். 2016 டிசம்பரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எம்பாமிங் செய்ய மாநில அரசு சுதா சேஷய்யனுக்கு அழைப்பு விடுத்து, அவரே எம்பாமிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாளராக : கடந்த 2021 நவம்பர் மாதம் 19ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் தொடக்க விழா நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சுதா சேஷய்யன் பங்கேற்று முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அதேபோல, 2022 டிசம்பரில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிறைவு விழாவிலும் அவரே நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்றார்.

உயரிய புகழ்வாய்ந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில் இருந்துகொண்டே, நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், மொழிபெயர்ப்பு அறிவிப்பாளராகவும் சுதா சேஷய்யன் பணியாற்றியது அப்போது விவாதங்களைக் கிளப்பியது. இந்நிலையில், இன்று நாடாளுமன்ற திறப்பு விழாவை தொகுத்து அளித்து வருகிறார் சுதா சேஷய்யன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+