திஹார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் சுனிதா! அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து ஆலோசனை!
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை சந்திக்க அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது சுனிதாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல கடந்த 21ம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கெஜ்ரிவாலின் கைது, ஆம் ஆத்மி மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்றும், அமலாக்கத்துறை சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மாவின் ஒரு நபர் அமர்வுக்கு முன்னர் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் கெஜ்ரிவாலுக்கு சாதகமாக அமையவில்லை.
ஒருபுறம் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்யாதது அமலாக்கத்துறைக்கு சவாலானதாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பது தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சூழலில், கட்சியை காப்பாற்ற அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நேரடியாக களத்தில் குதித்திருக்கிறார்.
கடந்த மார்ச் 31ம் தேதி டெல்லியில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி பொதுக்கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவால் முதல் முறையாக பங்கேற்றிருந்தார். இதற்கு முன்னர் கட்சியின் சில நிகழ்வுகளில் அவர் பங்கேற்றிருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த கூட்டத்தில் சோனியா காந்தியுடன் சுனிதா கலந்துரையாடினார். ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சிகள், அதன் தலைவர்கள் அன்று ஒரே மேடையில் இருந்தது பேசு பொருளானது. அதேபோல ராஞ்சியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் சுனிதா பங்கெடுத்திருந்தார். இதில் அவர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனுடன் ஒரே மேடையில் பங்கேற்றிருந்தார்.
இப்படி இருக்கையில், சிறையில் உள்ள கெஜ்ரிவாலை சந்திக்க சுனிதா அனுமதி கோரியிருந்தார். ஆனால், அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது டெல்லி அரசியல் களத்தை மேலும் சூடாக்கியது. பின்னர் இது குறித்து வழக்கறிஞர்கள் சட்ட முயற்சியை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு பேர் வரை கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதி உண்டு என்கிற நிலையில், சுனிதாவுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து சுனிதா கெஜ்ரிவாலுக்கும், அமைச்சர் அதிஷிக்கும் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதியளிக்கப்பட்டது. கெஜ்ரிவாலை சந்தித்த விவகாரம் குறித்து பேசிய அதிஷி, "டெல்லியில் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்குவது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார். கோடைக்காலம் என்பதால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார். உடல் நலம் குறித்து நாங்கள் கேட்டபோது அதற்கு பதிலளிக்காத கெஜ்ரிவால் டெல்லியின் அரசியல் சூழல் குறித்து விசாரித்தார்" என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications