மணிப்பூரில் பாஜகவிற்கு ஆதரவு தொடரும்.. நிதிஷ் குமார் அறிவிப்பு.. ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் நீக்கம்
டெல்லி: மணிப்பூரில் பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை அம்மாநில ஐக்கிய ஜனதா தளம் வாபஸ் வாங்கியது. ஆனால் வாபஸ் வாங்கிய சில நிமிடங்களில் அதன் மாநில தலைவரை தேசிய தலைவர் நிதிஷ் குமார் நீக்கி.. பாஜகவிற்கு ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றது.

240 இடங்களில் பாஜக வென்றது இதனால் பாஜக ஆட்சி நீடிக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.
கிங் மேக்கர்ஸ்:
லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது. இவர்களின் உதவியுடன்தான் பாஜக தற்போது ஆட்சி அமைத்துக்கொண்டு இருக்கிறது.
அதிர்ச்சி சம்பவம்:
இப்படிப்பட்ட நிலையில்தான் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மணிப்பூரில் பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை அம்மாநில ஐக்கிய ஜனதா தளம் வாபஸ் வாங்கியது. ஆனால் வாபஸ் வாங்கிய சில நிமிடங்களில் அதன் மாநில தலைவரை தேசிய தலைவர் நிதிஷ் குமார் நீக்கி.. பாஜகவிற்கு ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பாஜக தலைமையிலான மணிப்பூர் மாநில அரசாங்கத்திற்கான ஆதரவைதிரும்பப் பெற்றதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது. இதனால் தேசிய அளவில் பெரிய விவாதங்கள் ஏற்பட்டது. எங்கே பாஜக - நிதிஷ் கூட்டணி உடைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. இப்படிப்பட்ட நிலையில் அதன் ஐக்கிய ஜனதா தளத்தின் மணிப்பூர் தலைவர் பைரன் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அதோடு இல்லாமல்.. பாஜகவிற்கான ஆதரவு மணிப்பூரில் தொடரும் என்றும் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
மணிப்பூர் சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எம்.டி.அப்துல் நசீர் என்ற ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ளார். பிப்ரவரி-மார்ச் 2022 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆறு JD(U) வேட்பாளர்களில், ஐந்து பேர் பின்னர் ஆளும் பாஜகவில் இணைந்தனர். இந்த ஒரு எம்எல்ஏ அப்துல் நசீர் எதிர்க்கட்சி வரிசையில் தொடர்வார் என்று அம்மாநில ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது.
இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய பிரிவு அங்கீகரிக்கவில்லை. இதையடுத்தே ஐக்கிய ஜனதா தளத்தின் மணிப்பூர் தலைவர் பைரன் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பாஜகவை சமாதானம் செய்யும் விதமாக பாஜகவிற்கான ஆதரவு மணிப்பூரில் தொடரும் என்றும் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications