வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவா?.. எதிர்ப்பா?.. இளையராஜாவின் நிலைப்பாடு இதுதான்
டெல்லி: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அதிகாலை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதில் நியமன உறுப்பினரான இளையராஜா வக்பு வாரியத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளாரா, எதிராக வாக்களித்துள்ளாரா என்று தெரிந்து கொள்ளலாம்.
முஸ்லிம் மன்னர்களாலும், செல்வந்தர்களும் கடவுளுக்கு தானமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட கோடிக்கணக்கிலான சொத்துகளே வக்பு சொத்துகளாகும். இந்த சொத்துகள் மூலம் வரும் வருவாயைக் கொண்டு முஸ்லிம் மக்களின் கல்வி, மசூதி பராமரிப்பு ஆகிய நற்பணிகளுக்காக செலவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 1954 ஆம் ஆண்டு வக்பு சொத்துகளை முறைப்படுத்துவதற்காக வக்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர், பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 1995 ஆம் ஆண்டு புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த சட்டமே அமலில் உள்ளது. இந்நிலையில், வக்பு சொத்துகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக மோடி தலைமையிலான அரசு வக்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்து கடந்த ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு அதில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டதையடுத்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, வக்பு சட்ட மசோதாவை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கடும் கோஷங்களுக்கு மத்தியில் அமைச்சர் மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீதான விவாதம் நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. அதிகம் பேர் ஆதரவளித்ததால் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, நேற்று மாநிலங்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதம் சுமார் 14 மணி நேரம் நடைபெற்றது. பின்னர் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மசோதா மீதான வாக்கெடுப்பை மேற்கொண்டார். 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு அளித்தும், 95 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். இதையடுத்து, மாநிலங்களவையிலும் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் மற்றும், அதிமுக உறுப்பினர்களான தம்பிதுரை, சிவி சண்முகம், சந்திரசேகரன், தர்மர் ஆகியோர் எதிராக வாக்களித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார். மதிமுக தலைவர் வைகோ எதிராக வாக்களித்துள்ளார்.
வக்பு சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக தமாகா உறுப்பினர் ஜிகே வாசன் ஆதரவாகவும், நியமன உறுப்பினர் இசையமைப்பாளர் இளையராஜாவும் வாக்களித்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications