இந்தியை திணிப்பதாக நினைக்காதீங்க.. நவோதயா பள்ளி வழக்கு.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு
டெல்லி: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நவோதயா பள்ளிகள் தொடங்குவதை இந்தியைத் திணிக்கும் முயற்சியாக நினைக்க வேண்டாம். தமிழக மாணவர்களுக்கான வாய்ப்பு என்று பார்க்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் அடுத்த 6 வாரத்திற்குள் இடத்தினை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக குமாரி மகா சபா அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை நவோதயா பள்ளிகள் மீறாது என்றும், மாவட்ட வாரியாக 240 மாணவர்கள் பயில நவோதயா பள்ளிகளுக்கு தற்காலிக இடத்தை வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2017-ல் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், தமிழ்நாட்டில் உள்ள இரு மொழி கொள்கையை நவோதயா பள்ளிகள் பின்பற்ற வேண்டும்.
கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி
அதோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 ஏக்கர் நிலத்திற்கான நிதியையும் ஒதுக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை மொழிப் பிரச்சினையாக்க வேண்டாம். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கிடைப்பது குறித்து அக்கறை கொள்ள வேண்டியிருக்கிறது.
இரு மொழி கொள்கை உள்ளிட்ட இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் மத்திய அரசுடன் தமிழக அரசு விவாதிக்கட்டும். கூட்டாட்சி என்பதில் விவாதம் அவசியம். நவோதயா பள்ளிகள் தொடங்குவதை இந்தியைத் திணிக்கும் முயற்சியாக நினைக்க வேண்டாம். தமிழக மாணவர்களுக்கான வாய்ப்பு என்று பார்க்க வேண்டும்.
6 வாரம் டைம்
இதுதான் எங்கள் மொழி கொள்கை என்று மத்திய அரசிடம் தெரிவியுங்கள். கட்டாய தமிழ் கற்றல் சட்டம், இரு மொழி கொள்கை உள்ளிட்டவற்றை செயல்படுத்தும் முறை பற்றி மத்திய அரசின் செயலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். அவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், அடுத்த ஆறு வாரத்திற்குள் பள்ளிகள் அமைப்பதற்கான இடங்களை கண்டறிய வேண்டும். இப்போதே பள்ளிகளை கட்ட வேண்டும் என நாங்கள் உத்தரவிடவில்லை. பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை மட்டும் தான் கண்டறிய உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனர். இந்த வழக்கின் விசாரணை 6 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
நவோதயா பள்ளிகள் விவரம்:
கிராமப்புற மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் என்ற நோக்கத்துடன், நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவோதயா பள்ளி அமைக்க வேண்டும் என்று 1986 ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நவோதயா பள்ளிகளை தொடங்க மாநில அரசுகள் நிலம் மட்டும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி கட்டவும் மத்திய அரசு 20 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறது.
இந்த பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 6 முதல் 8 வரை தாய்மொழியிலும், அதற்கு பிறகு இந்தி, ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்கும். இந்த பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாகவே கல்வி வழங்கப்படுகிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications