10 ஆண்டு பழைய வாகனம் வைத்திருப்போருக்கு ஆப்பு? உச்ச நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவு
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால் அங்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிஎஸ் 3 அல்லது அதற்கு முந்தைய பழைய வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலங்களில் இதுவே நிலைமையாக இருக்கிறது. இதனால் டெல்லிவாசிகளுக்கு ஏர் பியூரிபையர்களும் மாஸ்குகளும் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்தாண்டு காற்று மாசு மிகக் கடுமையான நிலைக்குப் போய்விட்ட நிலையில், அங்குப் பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு
இதற்கிடையே அங்கு இயங்கும் பிஎஸ் IVக்கு முந்தைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியின் காற்று மாசு நிலையைக் குறிப்பிட்ட டெல்லி அரசு, உச்ச நீதிமன்ற முந்தைய உத்தரவில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதாவது முந்தைய உத்தரவில் பழைய வாகனங்கள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
கோரிக்கை
இருப்பினும், காற்று மாசு மோசமாகிவிட்ட நிலையில், இந்த உத்தரவில் திருத்தம் செய்யுமாறு டெல்லி அரசு கோரிக்கை வைத்தது. டெல்லி அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, பிஎஸ்-III வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரினார். பழைய வாகனங்களின் இருந்து வெளியேறும் கார்பன் மிக அதிகமாக இருப்பதாகவும் காற்று மாசு அதிகரிக்க அதுவே பிரதானக் காரணம் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
அனுமதி
இந்தக் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனது ஆகஸ்ட் 12ஆம் தேதி உத்தரவை மாற்றியமைத்தது. இது தொடர்பாக நீதிபதிகள் "10 ஆண்டுகள் பழமையான டீசல் அல்லது 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் பிஎஸ்-IVஆக இருந்தால் மட்டுமே கடுமையான நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது" எனத் தெளிவுபடுத்தினர்.
என்ன நடக்கும்!
அதாவது நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் அல்லது 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக் கூறியிருந்தது. ஆனால், இப்போது பழைய வாகனங்களாக இருந்தாலும் பிஎஸ் IV வாகனங்கள் மீது மட்டுமே நடவடிக்கை இருக்காது. பிஎஸ் 3 அல்லது அதற்கு முந்தைய வாகனங்களை வைத்திருப்போர் மீது டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க முடியும். டெல்லியில் காற்று மாசு மிக மோசமான அளவை எட்டிய நிலையில், நீதிமன்றம் தனது உத்தரவை மாற்றி அமைத்தது.
டெல்லியைப் பொறுத்தவரை அங்குக் காற்று மாசு உச்சத்தில் இருக்கிறது. இதனால் அங்குக் கட்டுமானத்திற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்படுகிறது. அங்குக் காற்று மாசு ஏற்பட வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டே டெல்லி அரசு பழைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications