ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் நிலுவை.. 2024 பிப்-க்குள் வழங்க வேண்டும்.. உச்சநீதிமன்றம் உத்தரவு!
ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் நிலுவையை மத்திய அரசு 2024 பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் வழக்கில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ரூ.28 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு 'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் நிலுவைத் தொகையை 3 மாதங்களுக்குள் ஒட்டுமொத்தமாக வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உச்ச நீதின்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. பின்னர் இந்தக் காலக்கெடு கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

காலக்கெடு நீட்டிப்பு
பிறகு கடந்த ஜனவரி 9-ம் தேதி இந்த காலக்கெடு மார்ச் 15 வரை மேலும் நீட்டிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒட்டுமொத்த நிலுவைத் தொகையையும் வழங்குவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி கேட்டுக்கொண்டார்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இதையடுத்து ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையின் சரியான அளவை குறிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இத்தொகை வழங்கப்படும் முறையை அரசு விவரிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களில் முதியவர்கள் மற்றும் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது அக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல்
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான பாதுகாப்பு அமைச்சகத்தின் முடிவை அட்டர்னி ஜெனரல் சீலிட்ட கவரில் அளித்தார். ஆனால் அடுத்து தலைமை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். இதுகுறித்து நீதிபதி கூறுகையில், அட்டர்னி ஜெனரல் அதனை நீதிமன்றத்தில் படித்துக் காட்டவேண்டும் அல்லது திரும்பப் பெறவேண்டும்.

ஏற்க மறுத்த நீதிபதிகள்
நாங்கள் எந்த ரகசிய ஆவணங்களையும், சீல் வைக்கப்பட்ட கவர்களையும் ஏற்க மாட்டோம், இதுபோன்ற நடவடிக்கையை நாங்கள் வெறுக்கிறோம். நீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். உத்தரவுகளை அமல்படுத்துவதில் இங்கு என்ன ரகசியம் இருக்க முடியும்? சீல் செய்யப்பட்ட கவரை சமர்ப்பிக்கும் முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனைத் தொடர்ந்து அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், வழக்கமான ஓய்வூதியம், உணவு மற்றும் உர மானியம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு நிதி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இதன்பின்னர் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கேலண்ட்ரி விருது பெற்றவர்கள் என 6 லட்சம் பேருக்கான நிலுவைத் தொகையை ஏப்ரல் 30ம் தேதிக்குள் ஒரே தவணையில் வழங்க வேண்டும்.

காலக்கெடு நீட்டிப்பு
70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் நிலுவைத் தொகையைச் வழங்க வேண்டும். மீதமுள்ள 11 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு 2024ம் ஆண்டு பிப்ரவரி 30ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications