சட்டத்தை மதிக்கலனா.. இந்தியாவில் இருந்து வெளியேறி விடுங்கள்! வாட்ஸ்அப்பிற்கு உச்சநீதிமன்றம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாட்ஸ்அப் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. பிரைவசி எனச் சொல்லி விளையாட முடியாது எனச் சொல்லி நீதிபதிகள், இந்தியாவின் சட்டங்களுக்குக் கட்டுப்பட முடியவில்லை என்றால் வெளியேறிவிடுங்கள் எனக் காட்டமான கருத்துகளைக் கூறினர்.

இந்தியர்களின் டேட்டாவை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்வது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கைத் தலைமை நீதிபதி சூர்யா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவின் செயல்பாடுகளை நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்தனர்.

Supreme court Chief Justice warns Meta Exit India if Can t Follow Law over WhatsApp Privacy case

உச்ச நீதிமன்றம்

வாட்ஸ்அப் தளத்தின் பிரைவசி கொள்கை தொடர்பாக, அதன் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. தலைமை நீதிபதி சூர்யா தலைமையிலான அமர்வு மெட்டா நிறுவனத்திடம், "இந்தியர்களின் பிரைவசியுடன் விளையாட முடியாது... எங்கள் டேட்டாவில் ஒரு சிறு பகுதியையும் நீங்கள் பகிர அனுமதிக்க மாட்டோம்" என்று உறுதியாகக் கூறினார்.. இந்தியர்களைச் சுரண்டுவதை நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

பின்னணி

வாட்ஸ்அப்பின் 2021 பிரைவசி அப்டேட் குறித்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதாவது இந்தியாவில் மெசேஜ் செயலிகளில் வாட்ஸ்அப் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது அனைவருக்கும் தெரியும். இந்தச் சூழலில் கடந்த 2021ல் வாட்ஸ்அப் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தப் புதிய பிரைவசி பாலிசியை ஒப்புக்கொள்ள வேண்டும் என மெட்டா தனது யூசர்களை வற்புறுத்தியது. இந்த புதிய பாலிசிபடி வாட்ஸ்அப் டேட்டாவை வைத்து மெட்டா நிறுவனம், அதன் மற்ற தளங்களிலும் யூசர்களுக்கு விளம்பரம் காட்ட முடியும்.

மெசஜிங் செயலியில் வாட்ஸ்அப்பிற்கு மாற்று எதுவும் இல்லாததால் இந்தியர்கள் வேறு வழியில்லாமல் இதை ஏற்க நேர்ந்தது. இந்த விவகாரத்திலேயே வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு இந்தியப் போட்டி ஆணையம் (CCI) ₹213 கோடி அபராதம் தீர்ப்பு அளித்தது. மேலும், டேட்டா பகிர்வுக்கும் தடை விதித்தது. இதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் அபராதம் உறுதி செய்யப்பட்ட போதிலும், டேட்டாவை பகிரலாம் என அனுமதி அளித்தது.

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்

தீர்ப்பாய உத்தரவுக்கு எதிரான வழக்கே உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பிஸ்னஸ் செய்ய இதுபோல சுரண்டல் நடப்பதாகக் கடுமையாக விமர்சித்தார். அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, "இந்தியா அரசியலமைப்பை உங்களால் பின்பற்ற முடியாவிட்டால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். இந்தியர்களின் பிரைவசி சமரசம் செய்யப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

கோடிக்கணக்கான ஏழைகள், கல்வியறிவற்ற மக்கள் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தும் நிலையில், அவர்களால் இந்தக் கொள்கையைப் புரிந்துகொள்ள முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அவர்கள் மேலும், "ஒரு ஏழைப் பெண் அல்லது சாலையோர வியாபாரி, தமிழ் மட்டும் பேசும் ஒருவர்... இவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியுமா?

எங்களுக்கே புரிவதில்லை

சில சமயங்களில் நாங்களே உங்கள் கொள்கைகளைப் புரிந்துகொள்வதில் சிரமப்படுகிறோம்... அப்படியென்றால் கிராமப்புற பீகாரில் வாழும் மக்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்? இது தனிப்பட்ட தகவல்களைத் திருடும் வழி. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று நீதிமன்றம் எச்சரித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+