"மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான புதிய மோதல்.." உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி: என்சிஇஆர்டி (NCERT) 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏதோ நீதித்துறையில் மட்டுமே ஊழல் மலிந்து இருப்பது போலத் திட்டமிட்டுச் சித்தரிக்க முயற்சி நடப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
என்சிஇஆர்டி என்று அழைக்கப்படும் National Council of Educational Research and Training கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் மாநில போர்டுகளுக்கும் தேசியப் பாடத்திட்டங்களை இந்த என்சிஇஆர்டி தான் வடிவமைக்கிறது.

நீதித்துறையில் ஊழல்
இந்த அமைப்பு 1 முதல் 12 வரை வகுப்பிற்கு அறிவியல், கணிதம், சமூக அறிவியல் போன்ற பாடங்களின் புத்தகங்களை வெளியிடுகிறது. அவை சிபிஎஸ்இ, மாநில பாடத்திட்டங்கள் எனப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி சமீபத்தில் 8ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் நீதித்துறையில் சவால் என்ற பாடத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பகுதி சேர்க்கப்பட்டு இருந்தது.
அதேபோல இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் சில கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், இதில் நீதித்துறை தொடர்பாகவும் நீதிமன்றங்களில் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாகவும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முறையீடு
இது தொடர்பாகத் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி முறையீடு செய்தனர். இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அப்போது "நீதித்துறை ஊழல்" எனக் குறிப்பிடப்பட்டதற்கு, தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இதை நீதித்துறை மீதான "திட்டமிட்ட, ஆழமான தாக்குதல்" எனக் குறிப்பிட்ட அவர், நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவோ, கேள்வி கேட்கவோ உச்ச நீதிமன்றம் யாரையும் அனுமதிக்காது என்றார்.
கவலை
இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என அறிவித்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்படப் பலரிடமிருந்து இந்த விவகாரம் குறித்து தனக்கு அழைப்புகள் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்..
அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், "நீதித்துறை ஊழல்" பாடம் சேர்க்கப்பட்டதால் வழக்கறிஞர் சங்கத்தினரும் வேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்களைக் குறிப்பிடாமல், நீதித்துறை மட்டும் குறிவைக்கப்படுவதாக அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
அனுமதிக்க மாட்டோம்
அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே இது புதிய மோதல் என்றார் தலைமை நீதிபதி சூர்ய காந்த், "இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குக் காரணமானோர் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதித்துறை மீதான தாக்குதலை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது. நீதித்துறையில் ஊழல் மலிந்துள்ளது என்று பாடப்புத்தகத்தில் சேர்த்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.
திட்டமிட்டு இதுபோன்ற ஒரு பகுதி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் எங்களுக்குத் தெரியும். நீதித்துறையில் மட்டுமே ஊழல் இருப்பது போலச் சித்தரிக்க முயற்சி நடக்கிறது" என்றார்.
நீக்கம்
உச்ச நீதிமன்ரம் நேரடியாக அதிருப்தி தெரிவித்து இதுபோன்ற கருத்துகளை கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையே அந்த குறிப்பிட்ட பாடத்திட்டத்தை நீக்க என்சிஆர்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications