Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி கலவர வழக்கில்.. உமர் காலித்துக்கு ஜாமின் வழங்க மறுப்பு! உச்சநீதிமன்றம் கறார்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கலவர வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜேஎன்யூ மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டிருந்தார். பிணை கோரி உயர்நீதிமன்றத்தை உமர் காலித் அணுகி இருந்த நிலையில் ஜாமீன் மறுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்திருக்கும் உச்சநீதிமன்றம், உமர் காலித்துக்கு பிணை வழங்க மறுத்துள்ளது.

தங்களுக்கு எதிராக பொய்யான ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டிருக்கிறது என்று உமர் காலித் தரப்பு வாதங்களை முன் வைக்கப்பட்டிருந்தது. உமர் காலித்துக்கு ஆதரவாக நியூயார்க் மேயர் மம்தானி கடிதம் எழுதியிருந்ததும், இந்த வழக்கின் மீது சர்வதேச கவனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கும் உச்சநீதிமன்றம் உமர் காலித்துக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்திருக்கிறது.

Supreme Court Umar Khalid

உமர் காலித் மீதான வழக்கு என்ன?

கடந்த 2020ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்தது. அதேபோல இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும் வலதுசாரி குழுக்கள் போராட்டத்தில் இறங்கின. இதனையுடுத்து பிரிவுகளுக்கு இடையில் மோதல் வெடித்தது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கலவரம் குறித்த 100க்கும் மேற்பட்ட வழக்ககள் பதிவு செய்யப்பட்டன.

இதனையடுத்து, கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர் என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் உமர் காலித் உட்பட அவரது சககாக்கள் பலரை கைது செய்திருந்தது. உமர் காலித் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கும் ஜாமீன் மறுப்பும்

ஜாமீன் கோரி உமர் காலித் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சித்தார்த் மிருதுள் மற்றும் ரஜினி பட்நாகர் அடங்கிய அமர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கில் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், இந்த குற்றச்சாட்டுகள் முதல் கட்டமாக உண்மையாக தெரிகிறது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்திருந்தார் காலித். விசாரணை நீண்ட காலம் தாமதமாகிறது என்றும், எனவே பிணை வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால், விசாரணை இவ்வளவு காலம் நீடிப்பது இயல்பானது என்றும், இது மட்டுமே பிணை வழங்க போதுமான காரணம் இல்லை என்றும் கூறி ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து இன்று உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீதான உத்தரவு வெளிவந்திருக்கிறது.

இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம், வழக்கின் மற்ற ஐந்து இணை குற்றவாளிகளான

  • குல்பிஷா பாத்திமா
  • மீரான் ஹைதர்
  • ஷிஃபா உர் ரஹ்மான்
  • முகமது சலீம் கான் மற்றும்
  • ஷதாப் அகமது

ஆகியோருக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் அர்விந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது. மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் தர ரீதியாக வேறுபட்ட நிலையில் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+