டெல்லிக்கு போன புகழேந்தி.. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிரான அப்பீல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி : தற்போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் புகழேந்தி, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கு மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புகழேந்தியை அதிமுகவில் நீக்கி உத்தரவிட்டிருந்தனர்.

அதிமுகவில் நீக்கப்பட்டதற்கு எதிராக புகழேந்தி, ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் புகழேந்தி.

 புகழேந்தியை நீக்கிய ஓபிஎஸ் ஈபிஎஸ்

புகழேந்தியை நீக்கிய ஓபிஎஸ் ஈபிஎஸ்

கர்நாடகா மாநில அதிமுக செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்த புகழேந்தி, அதிமுக கூட்டணி கட்சியான பாமகவை விமர்சித்ததன் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

ஐகோர்ட் உத்தரவு

ஐகோர்ட் உத்தரவு

இதனை எதிர்த்து புகழேந்தி சென்னையில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பின் வாதங்களை ஏற்பதாகவும், நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி தலைமைக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

டெல்லிக்கு போன புகழேந்தி

டெல்லிக்கு போன புகழேந்தி

இதையடுத்து, புகழேந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீது எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். புகழேந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

புகழேந்தி மனு தள்ளூபடி

புகழேந்தி மனு தள்ளூபடி

அப்போது தலைமை நீதிபதி, ஒரு அரசியல்வாதி எந்த எந்தக் கட்சியில் சேர்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். மேலும் இந்த விவகாரத்தில் ஒரு கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதும், உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்பதும் அதன் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதன்படியே அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் அவதூறு என்பது எங்கு இருக்கிறது? ஒரு கட்சியின் உள்விவகாரம் சார்ந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+