அமலாக்கத்துறைக்கு பெரும் பின்னடைவு- டிகே சிவகுமாரை கதறவைத்த வழக்கை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தலைக்கு மேல் தொங்கிய கத்தியாக இருந்த அமலாக்கத்துறையின் வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று அதிரடியாக ரத்து செய்தது.
கர்நாடகா மாநிலத்தில் மட்டுமல்ல.. பிற மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு நெருக்கடி ஏற்படும் போது அதை சமாளிக்க களமிறக்கப்படுபவர் தற்போதைய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார். காங்கிரஸ் கட்சிக்கு பேரிடர் மீட்பு படைத் தலைவர் போல செயல்படுகிறவர் டிகே சிவகுமார்.

அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட போதும் காங்கிரஸ் மேலிடம் டிகே சிவகுமாரையே அனுப்பி வைத்தது. தெலுங்கானாவில் காங்கிரஸ் உயிர் பெற்று ஆட்சியைக் கைப்பற்ற காரணமானவர்களில் டிகே சிவகுமாரும் ஒருவர்.
இப்படியான பின்னணி கொண்ட டிகே சிவகுமாரை 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை டார்கெட் செய்த்து. டிகே சிவகுமாரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளில் ரூ8.5 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதனடிப்படையில் டிகே சிவகுமார் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து. சிபிஐயும் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தது. 8 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் சிவகுமார் ஜாமீனில் விடுதலையானார்.
இதனிடையே தம் மீதான சிபிஐ வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவகுமார் மேல்முறையீடு செய்தார். அதேநேரத்தில் சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க சிபிஐக்கு தந்த அனுமதியை கர்நாடகா அரசு ரத்து செய்தது. தற்போது கர்நாடகா லோக் ஆயுக்தா இந்த வழக்கை நடத்தி வருகிறது.
அமலாக்கத்துறையின் வழக்குக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டிகே சிவகுமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது சிவகுமாரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தின் கீழ்தான் கிடைத்தது என்கிற ஆதாரத்தை அமலாக்கத்துறை தாக்கல் செய்யவில்லை; ஆகையால் டிகே சிவகுமார் மீதான அமலாக்கத்துறையின் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்தது. இது டிகே சிவகுமார் தரப்புக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. அமலாக்கத்துறைக்கு பெரும் பின்னடைவாகும்.
-
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications