திருப்பதி லட்டு விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது! சந்திரபாபு நாயுடுவை விளாசிய சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியது ஏன் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், அதன் முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? என உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு, கலப்படம் செய்யப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

tirupati laddu andhra pradesh supreme court

இதையடுத்து, தேவஸ்தானம் சார்பில் கோயிலில் தீட்டு கழிப்பதற்காக பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. திருமலையில் மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. இனிமேல் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய்யை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பியும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான சுப்பா ரெட்டி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரியிருந்த மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை இன்று விசாரித்தது.

அப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு செய்ய கலப்பட நெய் பயன்படுத்தியதாக சிறப்பு புலனாய்வு விசாரணை முடிவு வருவதற்கு முன்பே முதல்வர் சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் பேசியது ஏன்? முதல்வர் பதவியில் இருக்கும் நீங்கள் ஏன் இந்த விவகாரத்தை நேரடியாக பொதுவெளியில் பேசினீர்கள் என நீதிபதி கவாய் கேள்வி எழுப்பி உள்ளார்.

உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், அதை எப்படிப் பகிரங்கமாகச் சொல்ல முடியும்? அப்படி என்றால் விசாரணையின் நோக்கம் என்ன? அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது. முதல்வர் சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆய்வக அறிக்கை முன்பே வெளியிடப்பட்டது ஏன்? அந்த ஆய்வக அறிக்கையில் உள்ள நெய்தான் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் உள்ளதா? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+