சர்ச்சைகுரிய நிலப்பகுதி.... அயோத்தி வழக்கை நாளை முதல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை நாளை முதல் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கடந்த 1992 டிசம்பர் 6-ம்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே 2.7 ஏக்கர் நிலத்தில் வில்லங்கம் இருந்து வந்தது.
கடந்த 2010ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது.

மேல் முறையீடு
அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியில் 3-ல் 2 பங்கு இடத்தை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ள இடம் சன்னி வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என உத்தரவிட்டது. இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2011 செப்டம்பரில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மேல் முறையீடு செய்தன.

வழக்கு விசாரணை
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்களும் கடந்த மாதம் 29ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த மனுக்கள் புதியதாக அமைக்கப்பட இருக்கும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தனர்.

புதிய அமர்வு
அதன்படி, கடந்த 4ம் தேதி அனைத்து மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு அயோத்தி நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்றும் ஆனால் அதனை விசாரிக்கும் புதிய அமர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.

நாளை முதல் விசாரணை
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ரமணா, யு.யு.லலித் மற்றும் சந்திராசூட் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை முதல் விசாரணை மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications