பொன்முடி வழக்கு: உள்ளே வந்ததுமே மிரண்டுபோய் கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி.. ஏன் இத்தனை சீனியர்கள்?
டெல்லி: பொன்முடி அப்பீல் வழக்கில் இன்று ஆஜரான மூத்த வழக்கறிஞர்களைப் பார்த்து, உச்ச நீதிமன்ற நீதிபதியே மிரண்டு போய், எதற்கு இத்தனை சீனியர் வழக்கறிஞர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2012ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. அதில், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை அமைச்சராக பதவி வகித்தபோது பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1.73 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
பொன்முடி வழக்கு தீர்ப்பு: இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும், பொன்முடி, அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் பொன்முடி இழந்துள்ளார். தொடர்ந்து, பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சரணடையாமல் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கவும் அந்த மனுவில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதி எழுப்பிய கேள்வி: இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சித்தார்த் லுத்ரா உள்ளிட்டோர் ஆஜராகினர். இதைக் கண்டு, நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, "இந்த வழக்கில் என்ன ஸ்பெஷல்? ஏன் இத்தனை மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகியிருக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, பொன்முடி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு அனுமதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். பொன்முடி தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றால் மட்டுமே அவர் பதவியில் தொடர்வதோடு சிறை செல்லாமல் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications