சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு.. முக்கிய வழக்கு விசாரணை ரத்து.. பரபரப்பு!
டெல்லி : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் குடும்பத்தினருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதிகள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் வழக்குகள் தேக்கமடைவதை தவிர்க்க, அமர்வுகள் மாற்றப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மீண்டும் வெகுவாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,193 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள் அனிருத்தா போஸ், எஸ் ரவீந்திர பட், ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் குடும்பத்தினருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீதிபதி சூர்யா காந்த் குணமடைந்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் ஒரே பாலின திருமணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சில் ஒருவராக நீதிபதி ரவீந்திர பட் கடந்த வியாழக்கிழமை வரை விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அவருடன் அமர்வில் இருந்த மற்ற 4 நீதிபதிகளுக்கு தற்போது ஏதேனும் அறிகுறி இருக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஒரே பாலின திருமண வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தொடர்ந்து விசாரிக்க இருந்தது. இந்நிலையில், இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ரவீந்திர பட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இந்த அமர்வின் விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீதிபதிகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தேங்குவதை தவிர்க்கும் நோக்கில், புதிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications