498A சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்! பெங்களூர் ஐடி ஊழியர் மரணம்! உச்ச நீதிமன்றம் காட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருமணம் ஆன பெண்ணை தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டுதல் அல்லது கொடுமை படுத்துதல் அல்லது உயிருக்கு, உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலை செய்யும் கணவர் அல்லது குடும்பத்தினருக்கு எதிரான சட்ட பிரிவுதான் 498A ஆகும். இந்த இந்திய சட்ட பிரிவு 498A வை பெண்கள் பலரும் தவறாக பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

மனைவியின் தொல்லை, விவாகரத்து வழக்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, மனக்கஷ்டங்களால் பெங்களூரை சேர்ந்த 34 வயது ஐடி பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்துள்ளார். அவரின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. கடந்த திங்களன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷ், 24 பக்க தற்கொலைக் குறிப்பை எழுதி உள்ளார். அதேபோல் கிட்டத்தட்ட 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதில் தனது மனைவி நிகிதா சிங்கானியா மீது கடுமையான புகார்களை வைத்துள்ளார்.

bangalore

அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து கைநிறைய வருமானம் ஈட்டும் தனது மனைவி.. தன்னிடம் விவாகரத்திற்கு பின் 4 லட்சம் ரூபாய் பராமரிப்பு கேட்டார். எனது உறவினர்கள் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் பொய் வழக்குகளைப் பதிவு செய்தார். எங்களின் நான்கு வயது மகனுக்கும் பராமரிப்புத் தொகையாக மாதம் ₹ 2 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

பெங்களூரில் பணியாற்றிய பீகாரைச் சேர்ந்த அதுல் சுபாஷின் விவாகரத்து வழக்கு உத்தரபிரதேசத்தின் ஜான்பூரில் நடந்து வந்தது. அந்த பெண் நீதிபதி தன்னிடம் 4-5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதாவது பராமரிப்பு தொகையை 40 ஆயிரமாக குறைக்க 4-5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதை கொடுக்கவில்லை என்றதும் 2 லட்சம் ரூபாய் பராமரிப்பு கொடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டதாக தற்கொலை கடிதத்தில், வீடியோவில் சுபாஷ் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் புகார்: இந்த நிலையில்தான் திருமணம் ஆன பெண்ணை தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டுதல் அல்லது கொடுமை படுத்துதல் அல்லது உயிருக்கு, உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலை செய்யும் கணவர் அல்லது குடும்பத்தினருக்கு எதிரான சட்ட பிரிவுதான் 498A ஆகும். இந்த இந்திய சட்ட பிரிவு 498A வை பெண்கள் பலரும் தவறாக பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதை விமர்சனம் செய்துள்ளது. பெண்களை குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட சட்டம் இது.

ஆனால் இந்த சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். மனைவிமார்கள் தங்கள் கணவர்களை வழிக்கு கொண்டு வர, விவகாரத்தின் போது தங்களுக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ள இந்த சட்ட பிரிவு பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த ஆபத்தான டிரெண்ட் அதிகரித்து வருகிறது.

தங்களுக்கு இருக்கும் பர்சனல் கோபங்களை தீர்க்க இந்த சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், நாடு முழுவதும் திருமண தகராறுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. திருமண உறவில் வளர்ந்து வரும் முரண்பாடு மற்றும் மோதல் காரணமாக பெண்கள் பலர் 498A சட்டத்தை பயன்படுத்துகின்றனர். 498A போன்ற சட்டத்தை ஒரு கருவியாக தவறாகப் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

கணவன் மற்றும் அவனது குடும்பத்திற்கு எதிராக தனிப்பட்ட வகையில் பழிவாங்கும் விதமாக இந்த சட்டத்தை பெண்கள் பலர் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு இருக்கும் பர்சனல் ஆத்திரங்களை தீர்க்க இந்த சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+