Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசிங்கம்: பாலியல் கேஸில் சிக்கிய பாஜக எம்பி.. எப்ஐஆர் எங்கே? 72 மணி நேரம் கெடு விதித்த சுப்ரீம்கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்ட நிலையில் ஏன் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை? என டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்தான் இந்த பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் கடந்த மூன்று முறை தொடர்ச்சியாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பதவி வகித்து வருகிறார். அதேபோல கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்கையில் இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

Supreme Court questions why Delhi Police did not register FIR on Wrestlers sexual assault complaint

இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. நாட்டின் கொடியை சர்வதேச அரங்கில் உயர்த்த வீராங்கனைகள் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வியெழுப்பினர். இந்த போராட்டத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் புகார்களை அளித்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்பட்டது.

ஆனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் வீரர்கள்/வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். காரணம், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதுதான். மட்டுமல்லாது புகார் அளிக்கப்பட்டது ஏறத்தாழ 3 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் தற்போது வரை பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கயும் எடுக்கவில்லை என்றும் வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இவர் மீது டெல்லி கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் வீரர்கள் புகார் அளித்தனர்.

புகார் அளிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆன பின்னரும் அவர் மீது தற்போது வரை எஃப்ஐஆர் பதிவு செய்யபப்படவில்லை. இதனையடுத்து ஜந்தர் மந்தரில் வீரர்கள் இரவு பகலாக தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தையும் அணுகியுள்ளனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்ற விசாரித்தது. அப்போது "பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்ட நிலையில் ஏன் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை?" என டெல்லி காவல்துறைக்கு கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி 72 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜரான கபில் சிபில், "இந்த விவகாரத்தில் சட்டம் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர் மிகப்பெரிய அரசியல்வாதி, அதனால்தான் அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. மட்டுமல்லாது இந்த பாலியல் புகார் அளித்தவர்களில் 16 வயது சிறுமியும் ஒருவர் இருக்கிறார். எனவே இது போக்சோ குற்றத்தின் கீழ் வரும்" என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்த குழு அளித்த விசாரணை அறிக்கை பொது வெளியில் வெளியிடப்பட வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+