தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை மறுநாள் திரையிடப்படுகிறது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு கேரளா மாநிலத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது பான் இந்தியா திரைப்படமாக வெளியிடப்பட உள்ளது.
கேரளா அப்பாவி இந்து பெண்களை மூளைச் சலவை செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றுகின்றனர்; இஸ்லாமுக்கு மதம் மாற்றப்படும் அப்பாவி இந்து பெண்கள், ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பாலியல் அடிமைகளாக்கப்படுகின்றனர். இதுதான் தி கேரளா ஸ்டோரி சொல்லுகிற கதை. சுதிப்தோ சென் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். டிரைலரில், 32000 பெண்கள் இந்த வலையில் சிக்கியிருக்கின்றனர்; பல உண்மை சம்பவங்கள் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டது எனவும் கூறப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் வெளியான முதலே பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது தி கேரளா ஸ்டோரி திரைப்படம்.

இத்திரைப்படத்தில் காட்டுவதைப் போல அப்பாவி இந்து பெண்கள், இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு ஐஎஸ் பயங்கரவாதிகளின் பாலியல் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் ரூ1 கோடி பரிசு தரப்படும் எனவும் இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் இடம்பெறுவதால் இப்படத்தை தடை செய்யவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதனை தி கேரளா ஸ்டோரி படக்குழு மறுத்து வருகிறது.

மேலும் இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நேற்று உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்தது. அப்போது, தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்க முடியாது. இவ்வழக்கு தொடர்ந்த மனுதாரர், கேரளா உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications