வென்றால் ஓகே.. தோற்றால் மட்டும் இவிஎம் காரணமா? வாக்குச்சீட்டு கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் டிஸ்மிஸ்
டெல்லி: நம் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம், ‛‛நீங்கள் வெற்றி பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக உள்ளது. தோல்வியடைந்தால் இயந்திரம் மோசமானது என்று கூறுவீர்களா?’’ என்று கேள்வி எழுப்பியது.
நம் நாட்டில் ஒவ்வொரு தேர்தலின்போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றிய கேள்விகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக பாஜக வெல்லும்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி வருகின்றன. அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்டணி படுதோல்வியடைந்தது. இதையடுத்தும் காங்கிரஸ் தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் கிளப்பி வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தான் தங்களின் தோல்விக்கு காரணம். பாஜக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது என்று கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மல்லிகார்ஜூன கார்கே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாம். வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கிடையே தான் இன்று உச்சநீதிமன்றத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு வந்தது. அதாவது கேஏ பால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‛‛நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத், பிபி வராலே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கேஏ பால் சார்பில், ‛‛நம் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதில் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். இதற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 180 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் சர்வதேச அமைதி அமைப்பின் தலைவராக இருக்கிறேன். அனாதைகள், விதவைகள் உள்ளிட்டவர்களை மீட்டுள்ளேன்’’ என்றார்.
இதை கேட்ட நீதிமன்றம் , ‛‛சரி இருக்கட்டும். நீங்கள் அப்படி இருக்கும்போது அரசியல் விஷயத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன?’’ என்ற கேள்வியை எழுப்பியது. அதற்கு அவர், ‛‛இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல. நான் எந்த கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை. 155 நாடுகளுக்கு நான் பயணித்துள்ளேன். பெரும்பாலான நாடுகளில் ஓட்டுச்சீட்டு முறை தான் உள்ளது. சர்வாதிகார நாடுகள் தவிர பிற நாடுகளில் ஓட்டுச்சீட்டு முறை தான் உள்ளது.
தேர்தலின்போது பணம், மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகின்றன. இதன்மூலம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14, 19, 21 ஆகியவை மீறப்படுகின்றன. இன்று அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல அரசியல்கட்சி தலைவர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்’’ என்று கூறினார்.
இதை கேட்ட நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியானது. தோல்வியடைந்தால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை மோசம் என்று சொல்வீர்களா? என்று நீதிபதி விக்ரம் நாத் கேள்வி எழுப்பி அந்த மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
இதுதவிர, ‛‛வாக்குச்சீட்டு முறையில் இருக்கும் பலவீனம் நன்கு அறியப்பட்டுள்ளது. அதுபற்றிய முழுவிபரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கையை கவனிக்கும்போது நடைமுறையில் சீர்த்திருத்தங்கள் தேவை. இதுபோன்ற சூழலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் நல்லதாக இருக்கும்’’ என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications