Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய சீராய்வு மனு நிராகரிப்பு.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.

senthil balaji supreme court ed


இந்த வழக்கில் 471 நாள் சிறைக்கு பிறகு செந்தில் பாலாஜி்க்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முன்பு செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் அவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது.

இதனிடையே செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரி, அவரால் பாதிக்கப்பட்டதாக கூறும் ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையின்போது ஒரு முக்கியமான வாதத்தை எடுத்து வைத்தனர்.

அமைச்சராக பதவியில் இல்லை என கூறி ஜாமீன்பெற்ற செந்தில் பாலாஜி, தற்போதுஅமைச்சராக பதவியில் உள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா, அப்படி என்றால் ஜாமீனை மறு பரிசீலனை செய்வதற்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுங்கள், அது பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றதால் அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீன் கிடைத்தவுடன் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானதை சுட்டிக்காட்டி பாலாஜி மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+