நீதிமன்றத்துக்கு போலீஸ் ஒத்துழைப்பு தருவதில்லை... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி..!
டெல்லி: சிபிஐ, ஐ.பி., போலீஸ் போன்ற அமைப்புகள் நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிபதிகளே மிரட்டப்படும் நிகழ்வுகளும் நடப்பதாக மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விவரம் பின்வருமாறு;

ஜார்கண்ட்
ஜார்கண்ட் மாவட்டத்தின் கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கில் தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் அது தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தினார் நீதிபதி.

ஒத்துழைப்பு இல்லை
மேலும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் குறிப்பாக தாதாக்கள், பெரும் வசதி படைத்தவர்கள்,சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளே மிரட்ட படுகிறார்கள் என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார். மிரட்டல் தொடர்பாக CBI, POLICE, IB உள்ளிட்டோரிடம் புகார் கொடுத்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, நீதித்துறைக்கு அவர்கள் ஒத்துழைப்பதே இல்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மிரட்டல்
தற்போது இந்தியாவில் புதிய வழக்கமாக ஏதேனும் ஒரு வழக்கில் எதிராக தீர்ப்பு வழங்கிவிட்டால், நீதிபதிகள் குறிவைக்கபடுகிறார்கள். அப்போது மத்திய அரசுடைய தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், நீதிபதிகள் தாக்கப்படுவது என்பது துரதிருஷ்ட வசமானது எனவும் நீதிபதிகளை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று கூறிய கே.கே வேணுகோபால் நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு, போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

ஒரு வாரம் கெடு
இதனையடுத்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஒரு மாவட்ட நீதிமன்ற நீதிபதி கொல்லப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டம் நிலக்கரி மாபியா கும்பலுக்கு பெயர் போன இடம் அப்படியிருந்தும் மாநில நிர்வாகம் நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க தவறியுள்ளது எனவும் இது போன்று நாடு முழுவதும் ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருவதாக கூறினார். எனவே இதுபோன்ற சம்பவங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது எனக்கூறிய தலைமை நீதிபதி ஒரு வாரத்தில் மத்திய அரசு இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications