உஷார்.. சிறார் ஆபாச படங்களை போனில் பார்த்துவிட்டு டெலிட் செய்வதும் குற்றம்! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
டெல்லி: சிறார்களின் ஆபாசப் படங்கள் குறித்து சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும், சிறார்களின் ஆபாசப் படங்களை விநியோகிப்பது மட்டுமின்றி பார்த்துவிட்டு டெலிட் செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த ஜனவரி மாதம் குழந்தைகளின் ஆபாசப் படத்தைப் பார்த்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அதை எதிர்த்து அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுப்ரீம் கோர்ட்: அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , குழந்தைகள் நடித்த ஆபாச விடியோவை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை. மற்றவர்களுக்கு அனுப்பினால் மட்டுமே அது குற்றமாகக் கருதப்படும் எனச் சொல்லி அந்த இளைஞரை விடுவித்தனர். சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்தார். மேலும், அந்த கருத்தை உடனடியாக வாரத்திற்குள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், சிறார்களின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குறித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
டெலிட் செய்தாலும் குற்றம்தான்: சிறார்களின் ஆபாசப் படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது மட்டுமின்றி.. பதிவிறக்கம் செய்து பார்ப்பது, சேமித்து வைப்பது என அனைத்துமே போக்சோ கீழ் குற்றமாகவே கருதப்படும் என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு கூறியது. மேலும், சிறார்களின் ஆபாசப் படங்களை டவுன்லோட் செய்து பார்த்துவிட்டு டெலிட் செய்தாலும் அதுவும் குற்றமாகவே கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இந்த தீர்பில் இரு நீதிபதிகள் கூறிய முக்கிய கருத்துகளை நாம் பார்க்கலாம்.
சிறார் ஆபாசப் படங்களைப் பார்ப்பது, பகிர்வது அல்லது காட்சிப்படுத்துவது என்று எந்தவொரு செயலும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது
உத்தரவு: ஒரு நபர் சிறார் ஆபாசப் படங்களை வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டாலே அவர் தண்டிக்கப்படலாம்.. பணம் சம்பாதிக்கும் ஆசையில் சிலர் சிறார் படங்களை விநியோகம் செய்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் ஏற்கனவே அபராதம் விதித்துள்ளோம். இந்த விவகாரத்தில் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர நாங்கள் பரிந்துரைக்கிறோம்.. மேலும் அனைத்து நீதிமன்றங்களையும் அதன் உத்தரவுகளில் குழந்தை ஆபாசப் படங்கள் என்று குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பாலியல் கல்வி: இது குறித்த தகவல்களை உள்ளடக்கிய விரிவான பாலியல் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவது குற்றங்களைத் தடுக்க உதவும். பாலியல் கல்வி என்பதை மேற்கத்தியக் கருத்தாகப் பார்ப்பதாலேயே பாலியல் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்து அல்லது விநியோகிப்பார்களுக்குப் புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பிரச்சனைக்குரிய பாலியல் நடத்தையின் அறிகுறிகளைக் கண்டறியக் கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications