"ரம்பத்தை வைத்து காட்டை அழிப்பதா.." தேசத் துரோக சட்டப் பிரிவு இப்போது தேவையா? உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களை ஒடுக்குவதற்கு கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டப்பிரிவு இப்போது தேவையா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவு ஏ என்பதன் கீழ் தான் தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் கேட்டுக் கொண்டார்.

தலைமை நீதிபதி அமர்வு
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரமணா பல்வேறு முக்கியமான அப்சர்வேஷன் என்று சொல்லக்கூடிய வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியர்களை அடக்கி ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்டது தேசத்துரோக வழக்குகள், அதை இப்போது பயன்படுத்துவது அவசியமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் பிறகு
மகாத்மா காந்தி, திலகர் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆன பிறகும் அந்த சட்டத்தை நாம் தொடர்ந்து கடைபிடித்து வருவதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ரம்பத்தால் காட்டை அழிக்காதீர்கள்
தேசத்துரோக வழக்கு என்பது ஒரு கார்பெண்டரிடம் மரத்தை வெட்டுவதற்கு கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது. ஆனால் அந்த ரம்பத்தைக் கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் அழிக்கக் கூடிய வேலை தான் இப்போது நடந்து வருகிறது. இவ்வாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.

தவறான குற்றச்சாட்டுகள்
தேச துரோக வழக்கில் தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது அப்படி என்றால் விசாரணை அதிகாரிகளால் இந்த சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது ஊர்ஜிதமாகிறது. இவ்வாறும் நீதிபதி ரமணா தெரிவித்து உள்ளார். உங்கள் அரசு பழைய பல சட்டங்களை சட்ட புத்தகத்தில் இருந்து நீக்கியுள்ளது. அந்த வரிசையில், தேசத்துரோக வழக்கு பற்றி ஏன் நீங்கள் யோசிக்க கூடாது என்று அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதிகரித்த வழக்குகள்
சமீபகாலமாக நாடு முழுவதும், பத்திரிக்கையாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications