மருந்து கடை உரிமையாளர்கள் நாளை ஸ்ட்ரைக்.. தமிழ்நாட்டில் பாதிப்பு இருக்குமா? அருண்ராஜ் விளக்கம்
சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக நாளை நடைபெற உள்ள நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் மருந்தகங்களில், அவசர தேவைக்காக 5 ஆயிரம் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "மத்திய அரசை எதிர்த்து நாளை மருந்துகடை உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். எனினும் தமிழகத்தில் நாளை 5000 ஃபார்மசி கடைகள் திறந்து தான் இருக்கும்.

நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 ஆயிரம் மருந்தகங்களில், அவசர தேவைக்காக 5 ஆயிரம் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படும்.
மருந்துகளின் போதுமான மற்றும் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய, மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையால் மாவட்ட வாரியாக உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உதவி இயக்குநரின் கீழும் 2 மருந்து ஆய்வாளர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசோடு கலந்தது ஆலோசித்து ஒரு முடிவெடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசு சார்பாக நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களுடைய முடிவாகும். போதை பொருளை தடுப்பதற்காக முதல்வர் விஜய், ஒரு தனி பிரிவினை உருவாக்கி இருக்கிறார். போதைப்பொருள் தடுப்பதற்காக அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நாளை அரசு மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்கு செல்ல உள்ளோம்" என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications