பற்றி எரியும் மணிப்பூர்: நாசமாக்கப்பட்ட சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் எரிக்கப்பட்ட, சூறையாடப்பட்டு நாசமாக்கப்பட்ட சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இனக்குழுக்களிடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த வன்முறை சம்பவங்களில் 200-க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வாழ்விடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

manipur manipur violence

மணிப்பூரில் ஓராண்டாக நீடிக்கும் இந்த வன்முறை தற்போது குக்கி இனக்குழுவினரின் ஆயுதப் போராட்டமாகவும் உருமாறி கொடூர தாண்டவமாடி வருகிறது. குக்கி இனக்குழுவினர் மணிப்பூர் மாநிலத்தில் தங்களது வாழ்விடங்களை ஒருங்கிணைத்த சுயாட்சிக் கவுன்சில் ஒன்றை அமைக்க கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் மணிப்பூர் வன்முறைகள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் பெஞ்ச் முன்பாக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் போது, மணிப்பூர் அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்றைய விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அப்போது மணிப்பூர் அரசு சார்பாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மாநில அரசானது வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது; இதுவரையில் கைப்பற்ற ஆயுதங்கள், வெடிபொருட்கள் விவரஙளையும் தாக்கல் செய்திருந்தது.

உச்சநீதிமன்றம் அமைத்த கீதா மிட்டல் குழுவின் சார்பாக வழக்கறிஞர் விபா மகிஜியா ஆஜரானார். அப்போது, மணிப்பூரில் வன்முறை மிக மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. மணிப்பூரில் வன்முறைகள் ஓயவில்லை. மாநில மற்றும் மத்திய அரசுகள் மீதான மக்களின் நம்பிக்கை தளர்ந்துவிட்டது என அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதத்தின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இது தொடர்பாக நாங்களும் அறிவோம் என பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான பெஞ்ச், 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறைகளால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள்- அதாவது எரிக்கப்பட்ட, சூறையாடப்பட்ட சொத்து விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் மணிப்பூரில் சொத்துகளை சூறையாடி ஆக்கிரமித்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+