வாக்குப்பதிவு விகிதத்தை இணையத்தில்.. வெளியிடுவதில் என்ன சிரமம்! சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு விகிதத்தைத் தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிடுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சில முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளது.

நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

Supreme court sends notice to Election commission over ADR plea on immediate release of voter turnout data

வழக்கு: இதற்கிடையே ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதாவது நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் ஆணையம் பல நாட்களுக்குப் பிறகே வாக்குப்பதிவு விகிதத்தை வெளியிடுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்த தகவல்கள் 11 நாட்களுக்குப் பிறகும், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தகவல்கள் 4 நாட்களுக்குப் பிறகும் வெளியிடப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு நாளில் வெளியிடப்பட்ட தரவுகளுக்கும் இறுதி வாக்குப்பதிவு தரவுகளுக்கும் இடையே 5 சதவீதத்திற்கும் மேல் வேறுபாடுகள் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கேள்வி: வழக்கு விசாரணையின் போது தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விகிதத்தை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன பிரச்சினை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இதை வெளியிடுவதில் எந்த சிரமமும் இல்லை என்றும் இந்த செயல்முறையை முடிக்கக் காலம் எடுக்கும் எனப் பதிலளித்தார்.

அப்போது வழக்கு தொடர்ந்த ஏடிஆர் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், "வாக்குப்பதிவின் அனைத்து கட்டங்களிலும் முதலில் சொல்லப்பட்ட வாக்கு சதவிகிதத்தைக் காட்டிலும் இறுதி வாக்குப்பதிவு திடீரென அதிகரித்து இருக்கிறது" என்றார்.

என்ன சிரமம்: அப்போது தலைமை நீதிபதி "வாக்குப்பதிவு விகிதத்தை இணையதளத்தில் வெளியிடுவதில் என்ன சிரமம்" எனக் கேள்வி எழுப்பினார். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "அதில் எந்த சிரமமும் இல்லை.. இந்த செயல்முறைக்கு நேரம் எடுக்கும்.. ஒரே இரவில் செய்ய முடியாது.. ஏனென்றால் தொகுதியின் ஒவ்வொரு சாவடியிலிருந்தும் தரவுகளைப் பெறுகிறோம்.. ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவருக்கும் தேர்தல் முடிந்தவுடன் தரவுகளின் நகல் வழங்கப்படுகிறது..

எனவே, இதனால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், தரவுகளில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால், தேர்தல் வேட்பாளரே மனுத் தாக்கல் செய்யலாம்.. தேர்தல் நடக்கும் போது தொடரப்படும் இதுபோன்ற வழக்குகள் பொதுமக்கள், குறிப்பாக முதல்முறை வாக்காளர்களைத் தடுக்கும் வகையில் உள்ளது" என்றனர்.

சரமாரி கேள்வி: மேலும் தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், "வாக்குப்பதிவு தரவுகள் முழுமையாக எங்களுக்கு வரத் தாமதம் ஆகும்.. அதே நாளில் வருவதில்லை" என்றார். அப்போது தலைமை நீதிபதி, "சரி முதல் நாளில் வருவதில்லை என வைத்துக் கொள்ளலாம்.. இந்த தரவுகள் இரண்டாவது நாளில் வந்துவிடுகிறதே.. அப்போது அதை ஏன் இணையத்தில் பதிவேற்றக்கூடாது?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை மே 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+