Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என்ன கேள்வி கேட்டாலும் ஒரே பதில்!" SIR வழக்கில் தேர்தல் ஆணையத்தை மிக கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சார் தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், தேர்தல் ஆணையத்தின் மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். சார் விவகாரத்தில் வாக்காளர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலையில், அதற்குத் தேர்தல் ஆணையம் இயந்திரத்தனமான மற்றும் வழக்கமான பதில்களையே கொடுப்பதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. நடைமுறைச் சிக்கல்களை மறைக்கத் தேர்தல் ஆணையம் முயல்வதாகத் தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இப்போது சார் பணிகள் நடந்து வருகிறது. சார் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து தருவதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதற்கிடையே சார் பணிகளின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Supreme Court Slams EC Always Mechanical Cyclostyled Responses to Voter Woes in SIR process

தலைமை நீதிபதி அதிருப்தி

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தமிழகத்தில் 99.27% படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் செய்யப்பட்டன" என்று பதிலளித்தது.. இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி, "நடைமுறைச் சிக்கல் வரும்போது எல்லாம் உங்கள் பதில் 90% அல்லது 97% முடிந்துவிட்டது என்றே இருக்கிறது. சிக்கல் குறித்துக் கேட்டால் இயந்திரத்தனமாகவே பதிலளிக்கிறீர்கள்" என்று அதிருப்தி தெரிவித்தார்.

கேரள அரசு சார்பில் வாக்காளர் படிவங்களைச் சமர்ப்பிக்க மேலும் இரு வாரக் கால அவகாசம் கோரினார். 20 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்னும் படிவங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றார். கேரளாவில் காலக்கெடு டிசம்பர் 11-ல் இருந்து டிசம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கூடுதல் அவகாசம் கோரி வழக்கு தொடரப்பட்டது.

கேரளா வழக்கு

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி. சுரேந்திரநாத், "வேறு மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள், என்னைப் போன்ற வழக்கறிஞர்கள், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காகத்தான் திரும்பிச் சென்று படிவங்களைச் சமர்ப்பிக்கக் காத்திருக்கிறோம்" என்று நடைமுறைச் சிக்கல்களை எடுத்துரைத்தார். அப்போதும் தேர்தல் ஆணையம் கேரளாவில் 97.42% படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகப் பதிலளித்தது.

மேலும், தேர்தல் ஆணையம் சார்பில் ராகேஷ் திவேதி இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஊகத்தின் அடிப்படையிலேயே கேரள அரசு கோரிக்கை வைப்பதாகவும் கேரளாவில் நிலவரத்தைப் புரிந்து கொண்டே தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் திவேதி தெரிவித்தார். இதையடுத்து 18ம் தேதி என்ன நிலைமை என்பதைப் பார்த்து அதற்கேற்ப உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகச் சொல்லி இந்த வழக்கை டிசம்பர் 18க்கு ஒத்திவைத்தது.

அதிக அழுத்தம்

சார் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) அதிக அழுத்தத்தை எதிர்கொள்வதாகக் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இதனால் சில மோசமான சம்பவங்களும் கூட நடந்துள்ளன. இது தொடர்பாக நீதிபதி ஜாய்மால்யா பாக்சி கேள்வி எழுப்பினார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்த தேர்தல் ஆணையம், அரசியல் காரணங்களுக்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மறுப்பு

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருப்பதாகவும், ஓர் அலுவலருக்குப் படிவங்களைச் சேகரிக்க 37 நாட்கள் அவகாசம் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அவர் மேலும் "ஓர் அலுவலர் ஒரு நாளைக்கு 35 வாக்காளர்கள் வீதம் 37 நாட்களில் அனைவரையும் சந்திக்க முடியும். சிறிய கிராமங்களில் ஆறு அல்லது ஏழு வீடுகளை ஈஸியாக வேலையை முடிக்கலாம்" என்றார்.

இருப்பினும், இதை ஏற்கமறுத்த நீதிபதி பாக்சி, "இது முழுக்க களப்பணி. வீடு வீடாகச் சென்று, சரிபார்த்து, பதிவேற்ற வேண்டும். ஆனால், இந்த அலுவலர்கள் இதற்கு முன்பு டெஸ்க் வேலை செய்தவர்கள். எனவே, அலுவலர்கள் மீது அழுத்தம் உள்ளது" என்றார்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+