"வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைங்க”.. காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் காட்டம்
டெல்லி: "சுற்றுச்சூழலை கெடுக்கும் வகையில் வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் வைத்தால், அது அனைவருக்கும் சரியான செய்தியை அனுப்பும்." என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
பட்டாசுகளை வெடிப்பதாலும், வைக்கோலை எரிப்பதாலும் தலைநகர் டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வைக்கோலை எரிக்கும் விவசாயிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ராவிடம் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "விவசாயிகள்தான் நம் அனைவருக்கும் உணவை வழங்குகிறார்கள். அவர்களால்தான் நாம் சாப்பிடுகிறோம். அவர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள். அதேநேரத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சிலர் வைக்கோல்களை எரிப்பதை எப்படி ஏற்பது?
சுற்றுச்சூழலை பாதிப்பது விவசாயிகள் என்பதால் நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அவர்களில் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனைவருக்கும் அனுப்பும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உண்மையான நோக்கம் உங்களிடம் இருந்தால், விவசாயிகளில் சிலரை தண்டிப்பது குறித்து நீங்கள் ஏன் யோசிக்கவில்லை? ஏன் இதற்கு அஞ்சுகிறீர்கள்? வைக்கோலை உயிரி எரிபொருளாகவும் பயன்படுத்தலாம் என செய்தித்தாள்களில் நான் படித்தேன். இதற்கு இன்னும் 5 வருடங்களை எடுத்துக்கொள்வதை ஏற்க முடியாது" எனத் தெரிவித்தார்.
பட்டாசுகளை வெடிப்பதால் டெல்லியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனில், டெல்லிக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? பட்டாசு வெடிக்க ஏன் மொத்த நாட்டுக்கும் தடை விதிக்கக்கூடாது என்று பி.ஆர். கவாய் இதற்கு முன் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தற்போது விவசாயிகள் விஷயத்திலும் கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காலிப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆகியவற்றிற்கும் இதே போன்ற உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications