விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
டெல்லி: விவிபேட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உள்ளது.
நமது நாட்டில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுன்றன. இருப்பினும், வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் போது அதில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் இதை எழுப்பும். இதன் காரணமாக விவிபேட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
விவிபேட் வழக்கு: இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டும் அப்போது பல முக்கிய கருத்துகளை தெரிவித்தன.
குறிப்பாக தேர்தல் நடைமுறையில் புனிதம் இருக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மேலும், தேர்தலில் தவறு எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதியாக அனைவரும் நம்பும் நிலை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
விவிபேட் ஒப்புகை சீட்டை 100% எண்ணக்கோரிய வழக்கு.. தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பரபர வாதங்கள்: மேலும், வாக்குச்சாவடி மையங்களளுக்கு விவிபேட் எப்படி ஒதுக்கப்படுகிறது.. அது அப்படி எடுத்துச் செல்லப்படுகிறது, என்று தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்த நடைமுறையையும் விளக்கியது. அப்போது ஒரு கட்டத்தில் வாக்களித்த பிறகு வாக்காளர்கள் ஒப்புகை சீட்டைப் பெற முடியுமா என்று கூட நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இருப்பினும், அது வாக்காளர்களின் ரகசியத்தை சமரசம் செய்யும் என்றும் அந்த ஒப்புகை சீட்டுகளை வாக்குச்சாவடிக்கு வெளியே தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் பதிலளித்தது.
இதையடுத்து விவிபேட் சீட்டுகளை ஏன் எண்ணக்கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. விவிபேட் சீட்டுகளை எண்ண அதிக காலம் எடுத்துக் கொள்ளும் என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது. இப்போது நீதிபதிகள் ஏன் விவிபேட் சீட்டுகளை எண்ண இயந்திரங்களைப் பயன்படுத்த கூடாது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு விவிபேட் தாள்கள் மிகவும் மெல்லியதாகவும், ஒட்டும் தன்மையுடனும் இருப்பதால் இயந்திரங்கள் மூலம் எண்ண முடியாது என்றும் விவிபேட் சீட்டுக்கள் எண்ணுவதற்கு உருவாக்கப்பட்டது இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
நாளை தீர்ப்பு: அப்போது இரு தரப்பிலும் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதற்கிடையே விவிபேட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை இப்போது நடக்கும் லோக்சபா தேர்தலுக்கும் பெருந்தும் வகையில் இருக்கலாம் என்பதால் இந்தத் தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications