ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை? உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு!
டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பேரறிவாளன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Recommended Video

இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்பியது; அதேபோல் மிக முக்கியமான கருத்துகளையும் முன்வைத்தது. மேலும் கடந்த மார்ச் மாதம் பேரறிவாளனுக்கு இவ்வழக்கில் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.
இவ்வழக்கை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது, யாருக்கு விடுதலை செய்யும் அதிகாரம் இருக்கிறது என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்? 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துள்ளார். சிறை நன்னடத்தையும் உள்ளது. நன்றாக படித்துள்ளார். பரோலில் வெளிவந்த காலத்தில் எந்தவித புகாரும் பேரறிவாளன் மீது இல்லை. அப்படியான நிலையில் ஏன் பேரறிவாளனை விடுதலை செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை முடிவு எடுத்தது. அமைச்சரவையின் முடிவை ஜனாதிபதிக்கு ஏன் ஆளுநர் அனுப்பினார்? அமைச்சரவையின் முடிவு மீது ஆளுநர் ஏன் இறுதி முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினார்? இது கூட்டாட்சி அமைப்பின் தன்மையையே சீர்குலைத்து விடும் என ஆளுநருக்கு எதிராகவும் கண்டனங்களையும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஒரு முடிவை எடுத்து அதை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இது அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆளுநரின் இந்த நிலைப்பாட்டை ஏன் மத்திய அரசு ஆதரிக்கிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பேரறிவாளன் நாளை விடுதலை செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நிலவுகிறது
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications