உன்னாவ் வழக்கு: தண்டனை சஸ்பெண்டுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு: சுப்ரீம் கோர்ட்டில் டிச.29ல் விசாரணை
டெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 29) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கார், சிறுமி ஒருவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து பாஜகவில் இருந்தும் செங்கார் நீக்கப்பட்டார்.

இதற்கிடையே வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றபோது லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். அவர் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது. குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை, சதி, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் டெல்லிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து குல்தீப் சிங் செங்கருக்கு 2019-ல் விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் கடந்த 23 ஆம் தேதி அன்று குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீனும் அளித்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை கொலை செய்த வழக்கில் அவர் தண்டனையை அனுபவித்து வருகிறார். அந்த தண்டனையையும் சஸ்பெண்ட் செய்ய கோரி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்நிலையில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், பாதிக்கப்பட்டெ பெண் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சிபிஐ தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 29) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.
-
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி











Click it and Unblock the Notifications