Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

130 பேரை பலி கொண்ட குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத்தில் 130 பேரை பலி கொண்ட மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிடக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.

குஜராத்தின் மோர்பியில் ஆங்கிலேயர் ஆட்சியில் தொங்கு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.

130 பேர் பலி

130 பேர் பலி

மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த மோர்பி பாலத்தின் மீது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் கடந்த அக்டோபர் 30-ந் தேதி ஒன்று திரண்டனர். இதனால் தொங்கு பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 130 பேர் பலியாகினர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புனரமைப்பு பணிகளை முடிக்காமலேயே ஏன் பாலத்தை திறக்க அனுமதிக்கப்பட்டது என்பது முதன்மை கேள்வியாக இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக குஜராத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மோர்பி தொங்கு பால விபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தக் கோரி திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

வெளுத்த குஜராத் ஹைகோர்ட்

வெளுத்த குஜராத் ஹைகோர்ட்

முன்னதாக குஜராத் உயர்நீதிமன்றம், மோர்பி சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்த விசாரணையின் போது குஜராத்தில் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடியது உயர்நீதிமன்றம். மோர்பி பாலம் புனரைப்புக்கு ஏன் டெண்டர் விடப்படவில்லை? குஜராத் அரசு ஏன் அலட்சியமாக செயல்பட்டது என சரமாரியான கேள்விகளை உயர்நீதிமன்றம் எழுப்பியது. அத்துடன் மாநில அரசு பதிலளிக்கவும் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் தேர்தலில் தாக்கம்

குஜராத் தேர்தலில் தாக்கம்

குஜராத்தில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. டிசமபர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக குஜராத் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். குஜராத் தேர்தல் பிரசார களத்தில் மோர்பி பால விபத்து பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+