2 ஆண்டு தண்டனை:ராகுல் அப்பீல் மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு-ஜூலை 21-ல் விசாரணை-உச்சநீதிமன்றம்
டெல்லி: அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ராகுல் காந்தியின் இம்மேல்முறையீட்டு மனு மீது ஜூலை 21-ல் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி பேர்வழிகள் மோடி என்ற பெயர் கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்றார். இது மோடி சமூகத்தை இழிவுபடுத்துவதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2 ஆண்டு சிறை தண்டனை: இந்த வழக்கை விசாரித்த குஜராத்தின் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சூரத் நீதிமன்றம்.
எம்பி பதவி தகுதி நீக்கம்: 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் ராகுல் காந்தி எம்பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தி வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.
அப்பீல் தள்ளுபடி: பின்னர் ஏப்ரல் 3-ந் தேதி சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் இந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
உயர்நீதிமன்றத்தில்: பின்னர் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மற்றொரு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது நடந்த விசாரணையில், ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதிக்கு 3 மாதங்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடும். அதை ராகுல் காந்தியால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்தது.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்: ராகுல் காந்தி இறுதி வாய்ப்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு முன்னதாகவே அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாஜக எம்.எல்.ஏ புருனேஷ் மோடி, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அவசர வழக்காக மறுப்பு: இந்த அப்பீல் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வலியுறுத்தினார். ஆனால் உச்சநீதிமன்றம் இதனை நிராகரித்துவிட்டது. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது ஜூலை 21-ல் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications