சரத் பவார் vs அஜித் பவார்.. தேசியவாத காங்கிரஸ் பஞ்சாயத்து.. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: தேர்தல் ஆணையம் அஜித் பவார் பிரிவை என்சிபி கட்சியாக அங்கீகரித்த நிலையில், இதை எதிர்த்து சரத் பவார் தரப்பு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்க உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு யார் முதல்வர் என்பதில் பாஜக- சிவசேனா இடையே குழப்பம் ஏற்பட்ட நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது.

சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் இடையே தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி உருவாக்கப்பட்ட நிலையில், உத்தவ் தாக்ரே முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், இந்தக் கூட்டணி சில ஆண்டுகளிலேயே கவிழ்ந்தது.
மகாராஷ்டிரா: கடந்த 2022இல் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். என்சிபி- காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்த அவர்கள், தனியாக வந்து பாஜக உடன் கை கோர்த்தனர். இதனால் பெரும்பான்மையை இழந்து கூட்டணி அரசு கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றார். இதற்கிடையே சிவசேனாவில் என்ன நடந்ததோ அதே காட்சிகள் கடந்தாண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் நடந்தது. அக்கட்சியின் அஜித் பவார், அங்கே கலகம் செய்தார்.
அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் வந்து பாஜக- ஷிண்டே சிவசேனா கூட்டணியில் இணைந்தார். அவருக்குத் துணை முதல்வர் பதவி தரப்பட்டது. தற்போது அஜித் பவார் தரப்பிற்கு 41 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. அதேநேரம் சரத் பவார் தரப்பிற்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது. இதற்கிடையே இரு தரப்பும் தாங்கள் தான் ரியல் தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையத்தை அணுகினர்.
தேர்தல் ஆணையம்: இதில் கடந்த பிப். 6ஆம் தேதி அஜித் பவார் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியதே சரத் பவார் தான் என்ற போதிலும், சட்டசபையில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பதை வைத்துத் தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தது. மகாராஷ்டிராவில் சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்களில் அஜித் பவாருக்கே அதிக ஆதரவு இருந்ததால் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்தது.
வழக்கு: இதற்கிடையே தேர்தல் ஆணையம் அஜித் பவார் பிரிவை என்சிபி கட்சியாக அங்கீகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரத் பவார் தரப்பு கடந்த பிப். 12ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகார சின்னம் அஜித் பவார் தரப்புக்கு ஒதுக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சரத்பவார் தரப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
சரத் பவார் தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் சிங்வி, நாளை பிப்ரவரி 20-ம் தேதி மகாராஷ்டிரா சட்டசபை ஆரம்பிக்கும் நிலையில், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். நீதிபதி சூர்ய காந்த் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications