கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு! தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை!
டெல்லி: கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் சுமார் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த மனு நாளைய தினம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிப்பு காரணமாக சுமார் 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளச்சாராயம்: மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தாலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அவர்களில் சிகிச்சை பலனில்லாமல் 67 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சாராய வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது என்றும் இதை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.வழக்கு பதிவாகி வருவதாகவும் இதனால் மாநில அமைப்பே இதை விசாரித்தால் சரியாக இருக்காது என்றும் மனுதார்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை: இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இறுதியில் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், அப்போதே இந்த மேல்முறையீடு மனுவுக்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நாளைய தினம் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications