நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதமுள்ள 5 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிசந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தமிழக அரசு பதில்
அதில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்கட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டனர். இந்த வழக்கில் தமிழநாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், இந்த வழக்கில் சிறையில் இருந்த ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசு காலவரையற்ற பரோல் வழங்கியுள்ளது. இதனால் அவர் தற்போது அவரது உறவினர் வீட்டில் உள்ளார்.

ஆளுநர் காலம் தாழ்த்தினார்
அதேபோல நளினிக்கும் கடந்த 27.12.2021 முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை கருத்தில் கொண்டு ஏற்கெனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

தமிழக அரசு கட்டுப்படும்
எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் தமிழக அரசு அதற்கு கட்டுப்படும். குறிப்பாக, ஆளுநர் தனது தனிப்பட்ட அதிகாரமான அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161-ன் கீழ் எடுக்கும் முடிவில் ஒருசில காரணத்தில் நீதிமன்றம் தலையிட முடியும் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டியுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை ஒத்திவைப்பு
இதனிடையே நளினி, ரவிசந்திரன் ஆகியோரை தொடர்ந்து ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் என 5 பேரும் விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தனர். நளினி, ரவிசந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 5 பேரும் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை உச்சநீதிமன்றம் நீதிபதி பி.ஆர். காவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 5 பேரின் விடுதலை தொடர்பான வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications